Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியை கொலை செய்து ஃபேஸ்புக்கில் பிரசுரித்தவருக்கு தண்டனை

மனைவியை கொலை செய்து ஃபேஸ்புக்கில் பிரசுரித்தவருக்கு தண்டனை
, வியாழன், 26 நவம்பர் 2015 (18:35 IST)
தனது மனைவியை சுட்டுக் கொலைசெய்து அவரது சடலத்தின் படத்தை ஃபேஸ் புக்கில் பிரசுரித்ததற்காக ஒருவருக்கு அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்று கொலைக் குற்றத்திற்கான தண்டனை விதித்துள்ளது.


 
 
தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே தான் இவ்வாறு செய்ததாக டெரிக் மெடினா முன்வைத்த வாதத்தை ஃபுளோரிடாவில் உள்ள ஜூரி நிராகரித்தது.
 
கொலை செய்ததற்காக தனக்கு சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் அந்த சமுகவலைதளத்தில் எழுதியிருந்தார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
தங்கள் மகள் கொல்லப்பட்டு அவரது உடல் இணையத்தில் கணவனின் கோபத்திற்குக் கிடைத்த ஒரு கொடூரமான வேட்டைப் பரிசு போல காட்சிப் பொருளாக்கப்படுவது இனி ஒருபோது நடக்கக்கூடாது என்று அரச வழக்கறிஞர்கள் கூறினர்.
 
அவருக்கான தண்டனை ஜனவரியில் நிறைவேற்றப்பட உள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil