Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகத்துக்குள் ட்ரோன்களை அனுப்பி ஷாக் கொடுத்து மழை பெய்யவைக்க முயற்சி

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (11:50 IST)
மேகத்துக்குள் ட்ரோன்களை அனுப்பி ஷாக் கொடுத்து மழை பெய்யவைக்கும் ஒரு தொழில்நுட்பத்தை ஐக்கிய அரபு எமிரேட் பரிசோதிக்க உள்ளது.
 


மேகத்தில் உப்பு தூவி மழை பெய்யவைக்கும் கிளவுட் சீடிங் (மழைக் கருவூட்டல்) தொழில் நுட்பத்தை ஐக்கிய அரபு எமிரேட் ஏற்கெனவே பயன்படுத்தி வருகிறது.  ஆனால், அந்நாட்டின் ஆண்டு மழை பொழிவே 100 மி.மீ.தான் என்பதால் நிறைய மழை பெய்யவைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
 
2017ம் ஆண்டில், பல்வேறு மழை பெருக்கத் திட்டங்களுக்காக, 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான பணத்தை ஐக்கிய அரபு எமிரேட் செலவிட்டுள்ளது.
 
ரீடிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அந்த திட்டங்களில் ஒன்றுக்கு தலைமை வகிக்கின்றனர்.
 
ட்ரோன் மூலம் மேகங்களில் ஷாக் கொடுக்கும் திட்டம் பயன்படுத்தப் போகும் உத்தி என்ன? மேக நீர்த் திவளைகளின் மின் சுமையின் சமநிலையை மாற்றுவதே  அந்த உத்தி என்கிறார் அந்த திட்டத்தில் பணியாற்றிய பேராசிரியர் மார்ட்டென் அம்புவாம்.
 
"ஐக்கிய அரபு எமிரேட்டில் நிலத்தடி நீர்மட்டம் மோசமாக கீழே செல்கிறது. மழை பெய்விப்பதன் மூலம் அதை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் லட்சியம்" என்று  அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
அந்நாட்டில் ஏராளமான மேகங்கள் உள்ளன. எனவே, அவற்றில் உள்ள நீர்த் திவளைகளை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்படி தூண்டுவதே இந்த திட்டத்தின் யோசனை. நிலையான மின்சாரத்தை அவை எதிர்கொள்ளும்போது, காய்ந்த தலைமுடி சீப்போடு ஒட்டிக்கொள்வதைப் போல திவளைகள் ஒன்றுடன் ஒன்று  ஒட்டிக்கொள்ளும் என்கிறார் அவர்.
 
"இப்படித் திவளைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பெரிய திவளைகளாகும்போது, அவற்றின் எடைகூடி, மழைத் துளிகளாக கீழே விழும்" என்று அவர் மேலும்  விளக்கினார்.
 
"மின்சுமை உமிழும் கருவிகள், இந்தப் பணிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட உணர்திறன் கருவிகள் ஆகியவை ட்ரோன்களில் பொருத்தப்படும். பிறகு அவை, 'லோ ஆல்ட்டிடியூட்' எனப்படும் தாழ் குத்துயரப் பகுதியில் பறந்து காற்று மூலக்கூறுகளுக்கு மின்சுமை ஏற்றும். இது மழை பொழிவை ஊக்குவிக்கும்" என்று இந்த திட்டம்  கையாளும் உத்தியை அராப் நியூஸ் ஊடகத்திடம் விவரித்தார் ஐக்கிய அரபு எமிரேட் மழை பெருக்கத் திட்டத்தின் இயக்குநர் அல்யா அல் மஸ்ரூய்.
 
பிறகு இந்தப் சோதனையின் முடிவுகள் பரிசீலிக்கப்படும். எதிர்காலத்தில் பெரிய விமானம் மூலம் மேகங்களில் மின்சுமை ஏற்றும் திட்டத்துக்கு அதிக நிதி  கிடைக்கும் என்ற நம்பிக்கை அப்போது ஏற்படலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments