Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணெய் உற்பத்தியை நிறுத்த நான்கு நாடுகள் ஒப்புதல்

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (19:23 IST)
உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நான்கு பிரதான நாடுகள் எண்ணெய் உற்பத்தியை தற்போதைய மட்டத்திலேயே நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
 

 
அதிக உற்பத்தியால் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை வீழ்ச்சியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
 
ரஷ்யா, சௌதி அரேபியா, கத்தார் மற்றும் வெனிசுவேலா ஆகிய நான்கு நாடுகள் இந்த உடன்படிக்கையை எட்டியுள்ளன.
 
ஜனவரி மாதத்தில் செய்த எண்ணெய் உற்பத்தி அளவிலேயே தாங்கள் தங்கள் உற்பத்தியை வைத்திருக்கப்போவதாக அவை அறிவித்துள்ளன. ஆனால் மற்ற எண்ணெய் உற்பத்தியாளர்களும் இதே நிலையில் வைத்திருக்கும் பட்சத்தில்தான் இது அமல்படுத்தப்படும்.
 
ஆனால் இரான் கடந்த மாதம் தன் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க விரும்புவதாக ஏற்கனவே தெளிவாக்கிவிட்டது.
 
இந்த கூட்டத்தின் முடிவுகள் தெரிய வந்ததும், எண்ணெய் விலைகள் மீண்டும் சரிந்தன.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments