Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செளதிக்குள் கொரோனா வந்தது எப்படி? என்ன நடந்தது?

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (14:42 IST)
சௌதி அரேபியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை சௌதி அரசு உறுதி செய்துள்ளது.
 
இரானிலிருந்து பஹ்ரைன் வழியாக சௌதிக்குள் நுழைந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
 
அந்நாடு முன்பே கொரொனா தம் நாட்டிற்குள் நுழையாமல் இருக்கப் பல முயற்சிகளை எடுத்திருந்தது. ஹஜ் பயண விசாவையும்கூட ரத்து செய்திருந்தது. பஹ்ரைன் வழியாக சௌதிக்குள் நுழையும்போது, அந்த நபர் சமீபத்தில் இரானுக்குச் சென்றுவந்ததை மறைத்ததாகச் சௌதியின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
''முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தொற்றுநோய் தடுப்பு குழுவை நாங்கள் அனுப்பி அந்த நபரை சோதனை செய்தோம். அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஆய்வகத்தில் சோதனை செய்தபோது அந்த நபருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. அந்த நபரை தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறோம். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது',' என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
 
சௌதியைச் சேர்ந்த அந்த நபரோடு தொடர்பிலிருந்த மற்றவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம் என சௌதி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments