Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில்களை திறக்க வேண்டி நூதன போராட்டம்!

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (14:28 IST)
புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், மதுக் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கொரோனா முன்னெச்சரிக்கை கருதிக் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
 
இதனிடையே, புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு, நேற்று முதல் அனைத்து மதுபான கடைகளும் திறக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து இந்துக் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் புதுச்சேரி நகர மற்றும் கிராமப் பகுதிகளில்தான் உள்ள 108 இந்து கோவில்களுக்கு முன்பு தோப்புக்கரணம் போட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
 
மதுக்கடைகளைத் திறக்க அனுமதியளித்த அரசு, உடனடியாக கோவில்களைத் திறக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இந்து ஆலயங்களை திறக்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் தோப்புகரணம் போடும் போராட்டம் நடைபெற்றது.
 
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில்,ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் முன்பாக தோப்புகரணம் போடும் போராட்டம் நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்த போராட்டத்தில் 4 பேர் மட்டுமே பங்கு கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனால் 4 பேர் மட்டும் கலந்து கொண்டனர் தோப்புக்கரணம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தோப்புக்கரணம் போடும்போது மதுக்கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் திறக்கும் தமிழக அரசு கோவில்களை திறக்க மறுப்பது ஏன் என்று முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments