Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி ஆற்றில் கலந்த 'அரசியல்' எனும் சாக்கடை..

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (16:33 IST)
காவிரி விவகாரம் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காவிரியில் அரசியல் கலந்ததே காரணம் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருந்தார்.

 
இதையடுத்து நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் பிரகாஷ் ராஜின் இந்த கூற்று சரியா? தீர்ப்புகளை நடைமுறை படுத்துவதில் தான் சிக்கலா? என கேள்விகளை முன்வைத்திருந்தோம். அதற்கு பிபிசி தமிழ் வாசகர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.
 
''ஒரு நாட்டிற்கு உயர்ந்ததே அரசியல் சாசனம் அதுவே ஒரு குறிப்பிட்ட குடிமக்களுக்கு எதிராக இருக்கும் போது இங்க அரசியல் என்ன எல்லாமே கலக்கும்'' என பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் சுரேஷ்.
 
'குடி நீரில் சாக்கடை நீர் கலந்தால் எப்படியோ அப்படித்தான் காவிரி விவகாரமும். அரசியல் என்ற சாக்கடை நீர் குடிநீரில் கலந்து விட்டது, இல்லையென்றால் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும்'' என எழுதியுள்ளார் சரோஜா பாலசுப்ரமணியம்.
 
நேயர் துரை முத்துச்செல்வம் விரிவாக எழுதியுள்ள பின்னூட்டத்தில் ''பிரகாஷ்ராஜ் சொல்வது போல் காவேரி விவகாரத்தில் அரசியல் கலந்ததும் ஒரு காரணம் தான். காவேரி பாசன பரப்புகளில் விவசாயம் நடக்க ஆரம்பித்தால் மத்திய அரசின் மீத்தேன் திட்டங்களுக்கு இடையுறு வரும் இது இரண்டாவது காரணம். கர்நாடகா சொல்வது போல தண்ணீர் பஞ்சம் எல்லாம் ஒன்றும் இல்லை. 'அரிசியின் தரம்' தான் முக்கிய காரணம். தஞ்சாவூர் பொன்னியா கர்நாடகா பொன்னியா என ஏற்றுமதியார்கள் கண்முன் வந்தால் தஞ்சாவூர் பொன்னி தான் ஏற்றுமதியாளர்கள் தேர்வாக இருக்கும். எனவே தஞ்சாவூர் பொன்னியை விளைவதை ஒழிக்கப்பார்கிறார்கள். அடுத்து தொழிற் காரணம்.
 
பெங்களூர் பகுதிகளில் தொழிற்சாலைகள் வந்தால்தான் அந்த மாநிலம் முன்னேற்றம் அடையும். அடுத்து மண்டியா தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பதற்கு மூலக்காரணம் இதுதான். கர்நாடக அணைகளில் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருந்தால் தான் மண்டியா பிரச்சனை தீரும். காவேரி விவகாரத்தில் அரசியல் மட்டுமில்லை கீழ்தரமான பொருளாதார கொள்கைகளும் உள்ளன'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
'அரசியல் தான் காரணம் எனக்ககூறுவதே அரசியல் தானே பிரகாஷ்ராஜ்.காவிரி விவகாரத்தில் உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லலாமே!
 
A) உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலான்மை வாரியம் அமைக்க. B ) காவிரி மேலான்மை வாரியம் அமைக்க முடியாது. இதில் உங்க தெரிவு என்ன பிரகாஷ்ராஜ்? '' என பேஸ்புக்கில் கேள்வி எழுப்பியுள்ளார் அனோஜன் மகேஸ்வரன்.
 
'பிரகாஷ்ராஜ் கருத்து உண்மைதான். இரு மாநிலஅரசியல் பின்பு மத்திய அரசு அரசியல் தலையிடுகள். இரு மாநில விவசாயிகள் கலந்து பேச உதவி செய்தாலே போதும் நிலைமைகளை அறிந்தவர்கள் அவர்களே. இது குரங்கு தோசையை பங்கிட்ட கதையாகி விட்டது இப்போது நீதிமன்ற தீர்ப்புகள்'' என ட்விட்டரில் எழுதியுள்ளார் மேகராஜன்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments