Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரிஸ் தாக்குதல் : நாடு முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை

பாரிஸ் தாக்குதல் : நாடு முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை
, திங்கள், 16 நவம்பர் 2015 (17:48 IST)
பாரிஸ் தாக்குதல்களை அடுத்து சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய பயங்கரவாதிகளைத் தேடும் தீவிர நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாக பிரதமர் மானுவேல் வால் தெரிவித்துள்ளார்.


 
 
அவ்வகையில் விசாரணைகளில் ஒரு பகுதியாக 150க்கும் அதிகமான இடங்களை முற்றுகையிட்டு தேடுதல் நடவடிக்கையை போலீசார் நடத்தியுள்ளனர் எனவு பிரெஞ்ச் பிரதமர் கூறியுள்ளார்.
 
அவசரகால சட்டங்களின் அடிப்படையில், தீவிரவாத ஜிகாதி இயக்கங்களில் உள்ளவர்களிடம் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் மானுவேல் வால் தெரிவித்துள்ளார்.
 
முற்றுகையிட்டு தேடும் இந்த நடவடிக்கைகள் தெற்கேயுள்ள டுலூஸ் முதல் வடக்கே பெல்ஜியத்துடனான எல்லைப்பகுதிகள் வரையிலும், பாரிஸின் புறநகர் பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன.
 
இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இத்தாக்குதல்கள், பெல்ஜியத்தில் திட்டமிடப்பட்டு, பிரான்ஸுக்குள்ளே இருந்தவர்களின் உதவியுடன் நடைபெற்றுள்ளன என்று விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil