Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (16:59 IST)
கடந்த 2013-ஆம் ஆண்டில், தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை கொலை செய்த தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு, ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


 

 
தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்கார் பிஸ்டோரியஸ் உடனடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரசு மற்றும் பிஸ்டோரியஸ் ஆகிய இரு தரப்பும் மேல்முறையீடு செய்யலாம்.
 
கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 29 வயதான பிஸ்டோரியஸ் தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை தாழ்ப்பாளிட்டிருந்த ஒரு கழிப்பறையில் நான்கு முறை சுட்டார். ரீவா ஸ்டீன்காம்பை தான் சுட்டதை ஒப்புக்கொண்ட பிஸ்டோரியஸ், அச்சத்தின் விளைவாகவும், யாரோ திருடன் என்று எண்ணி தவறுதலாகவும் தனது காதலியை சுட்டுவிட்டதாக தெரிவித்தார்.


 

 
இந்த வழக்கில் குறைந்தது 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பிஸ்டோரியஸ் எதிர்நோக்கியிருந்த வேளையில், இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தோக்கோஜிலி மசிபா, புனர்வாழ்வு மற்றும் குற்றத்துக்கு வருத்தம் தெரிவித்தல் ஆகிய தனிமைப்படுத்தும் சூழல்கள், கொலை குற்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 15 ஆண்டுகள் என்ற நிலையிலிருந்து மாறி குறைந்த தண்டனை வழங்கக் காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments