Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய மொழி பேசுவோர்க்கு குடியுரிமை - புடின்

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (14:12 IST)
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் ரஷ்யக் குடியுரிமை வாங்குவதை எளிதாக்கும் விதமான புதிய சட்டத்துக்கு ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.

யுக்ரெய்னுடன் சென்ற மாதம் இணைந்துள்ள யுக்ரெய்னின் க்ரைமீயா பகுதியில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு ரஷ்யக் குடியுரிமை வழங்குவதாக வந்த சட்டத்தின் நீட்சியாக இந்த அறிவிப்பு வருகிறது.
 
யுக்ரெய்னின் கிழக்குப் பகுதியும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசம்தான்.
அங்கு வாழும் மக்கள் பலர், யுக்ரெய்னில் கடந்த பிப்ரவரி மாதம் ஐரோப்பிய ஆதரவு அரசாங்கம் ஒன்று பொறுப்பேற்றிருப்பது தொடர்பில் ஆழமான ஐயப்பாடுகளைக் கொண்டுள்ளனர்.
 
புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள துரித வழிமுறை மூலமாக மூன்று மாத காலத்தில் ஒருவர் ரஷ்ய குடியுரிமை பெற முடியும்.
 
ரஷ்ய கடவுச் சீட்டுகளை பெறக்கூடியவர்கள், தங்களுடைய மற்ற நாட்டு பிரஜாவுரிமையைத் துறக்க வேண்டும் என்ற நிபந்தனை புதிய சட்டத்தின் கீழ் இருக்கிறது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments