பணத்தை வீதியில் வீசி கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன திருட்டி தாத்தா!

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (16:47 IST)
தாடி வைத்த இந்த வெள்ளை முதியவர் இரண்டு தினங்களுக்கு முன்பு வங்கியில் கொள்ளை அடித்தார். 
 
பின் அந்த பணத்தை உற்சாகமாக வீதியில் தூக்கி எறிந்து அங்கு சென்று கொண்டிருந்த மக்களுக்கு உற்சாகமாகக் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
 
அமெரிக்காவின் கொலொராடோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வயதான ஒரு வெள்ளை முதியவர் கொலொராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள அகாடெமி வங்கியைத் திங்கட்கிழமை மதியம் கொள்ளையடித்தார் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், "வங்கியைக் கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்து, அந்த பணத்தை வீசி எறிந்தார்," என்று கூறுகின்றார். "பணத்தை எல்லா திசைகளிலும் தூக்கி எறிந்து கொண்டே கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்தார்," என்று மேலும் கூறினார்.
 
பின் அந்த பகுதியிலிருந்த ஸ்டார்பக்ஸ் காஃபி கடை அருகே கைது செய்யப்படுவதற்காகக் இந்த முதியவர் காத்திருந்தார். இந்த செயலில் ஈடுபட்டவர் 65 வயதான டேவின் வெயின் ஆலிவர் என கூறுகிறது கொலொராடோ ஸ்பிரிங்ஸ் காவல்துறை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - முன்பதிவு தொடங்கியது

ஆம்னி பேருந்து தீ விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு நிதியுதவி அறிவிப்பு

பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்.. கையில் எழுதி வைத்து தற்கொலை.

கரூர் துயர சம்பவம்.. 41 குடும்பத்தினர்களை சென்னையில் சந்திக்கின்றாரா விஜய்?

நண்பன் என்றால் நண்பனாக இருப்போம், துரோகி என்றால் காலில் மிதிப்போம்: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments