Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியதில்லை - தாலிபன்

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (00:32 IST)
ஆப்கானிஸ்தானைப் பிடித்த பிறகு முதல் முறையாக காபூலில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹிதீன்.
 
"நாடு முழுவதும் பாதுகாப்பு உள்ளது. யாரும் நாட்டைவிட்டு வெளியேறவேண்டியதில்லை," என்றார்.
 
தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடத்தலும் கொலையும் நடப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது "யாரும் யாரையும் கடத்தமுடியாது. ஒவ்வொரு நாளும் நாங்கள் பாதுகாப்பை அதிகப்படுத்துகிறோம். பொது மன்னிப்பு வழங்கப்படுமே அல்லாது, பகைமை இருக்காது" என்று அவர் தெரிவித்தார்.வேறொரு கேள்விக்குப் பதில் அளித்த அவர் "20 ஆண்டுகளுக்கு முன்போ, இப்போதோ எப்போதும் எங்கள் நாடு ஒரு முஸ்லிம் நாடு. ஆனால், அனுபவம், பக்குவம், பார்வை என்று வரும்போது இப்போதுள்ள எங்களுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எங்களுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நாங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கைகளிலும் வேறுபாடுகள் இருக்கும். இது ஒரு பரிணாம நடைமுறை" என்று அவர் கூறினார்.
 
" நாங்கள் ஒரு அரசாங்கத்தை அமைக்க இருக்கிறோம். அதன் பிறகுதான் என்னவிதமான சட்டம் நாட்டுக்கு வழங்கப்படும் என்று தெரியும். அரசாங்கத்தை அமைத்தபிறகு அது பற்றி தெரிவிக்கப்படும்," என்று அவர் கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments