Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்காட்லாந்து வாக்காளர்கள் பிரிவினையை நிராகரித்தனர்

ஸ்காட்லாந்து வாக்காளர்கள் பிரிவினையை நிராகரித்தனர்
, வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (12:31 IST)
ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.42% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.58% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.

ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களில் 31 உள்ளூராட்சிப் பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன.

இறுதி முடிவுகளின்படி ஸ்காட்லாந்த் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 1,914,187 பேரும் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று 1,539,920 பேரும் வாக்களித்திருந்தனர்.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்ததைவிட, பிரிவினையை எதிர்ப்பவர்களின் வாக்கு சதவீதம் சுமார் 3 சதவீதம் அதிகரித்திருப்பதை இறுதிமுடிவுகள் காட்டுகின்றன.

நேற்று வியாழக்கிழமை ஸ்காட்லாந்து முழுவதும் நடந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குப்பதிவில் சுமார் 80 சதவீதத்துக்கு மேலானோர் வாக்களித்துள்ளனர் என்று முன்னதாக வந்த வாக்குப்பதிவு விவரங்கள் தெரிவித்தன.

கருத்தறியும் வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின்னர் வெளியான யுகவ் நிறுவன எக்ஸிட் வாக்கெடுப்பு ஒன்று பிரிந்து போகவேண்டாம் என்ற தரப்புக்கு 54 சதவீத ஆதரவும், சுதந்திரம் கோரும் தரப்புக்கு 46 சதவீத ஆதரவும் இருப்பதாகக் கூறியது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil