Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றி மூக்கு எலியினம்

Webdunia
ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (19:55 IST)
புதிய வகை எலி இனம் ஒன்றை இந்தோனேஷியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


 

 
இந்த புதிய எலி இனத்திற்கு "ஹையோரினோமைஸ் ஸ்டீம்கி" என்று பெயரிடப்பட்டுள்ளது.  இது பன்றியின் மூக்கை போன்ற மூக்கை கொண்டுள்ளதாகவும், மற்றைய எலிகளைவிட தனித்துவமான அம்சங்களைக்கொண்ட, அசாதாரணமான எலியாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
சுலாவெசித் தீவில் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா மற்றும் அமெரிக்க ஆய்வாளர்களால், இந்த எலிகளில் ஐந்து கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த வகையான இனங்கள், இதற்கு முன்னர் ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை என மியூசியம் விக்டோரியாவின் பாலூட்டிகளுக்கான காப்பாளர் கொவின் ரோவ் தெரிவித்துள்ளார்.
 
இந்த எலிகள் பற்றியும், அவை எந்த அளவு காடு முழுவதிலும் பரவியுள்ளன என்பது பற்றியும் இதுவரை அறியப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறிப்பிடத்தக்க உருவியல் பரிணாம வளர்ச்சி
எலியின பரிமாண வளர்ச்சி வல்லுநரான, கெவின் ரோவ், ஆறு வாரங்களை இந்தோனேசியாவில் கழித்துள்ளார்.
 
அத்தோடு, மற்றைய விஞ்ஞானிகள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த குழுவினரோடு தொலைதூர காடுகளை சென்றடையவும் முயற்சித்துள்ளார். பன்றியின் மூக்கு அமைப்பைக்கொண்ட எலியை கண்டுபிடித்த, அற்புதமான தருணம் பற்றிய தனது அனுபவத்தை அவர் பிபிசியிடம் பகிர்ந்துக்கொண்டார்.
 
"நாங்கள் சில நாட்களாக நள்ளிரவு நேரத்தில் பொறிகளை அமைத்து வைத்திருந்தோம். அந்த சமயத்தில் தான், தற்செயலாக முற்றிலும் புதிய எலி கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு புதிய வகையான விலங்கு என்பது எனக்கு தெரிந்திருந்ததால், உடனடியாக நண்பர்களுக்கு குரல் கொடுத்தேன் " என்று கெவின் ரோவ் தெரிவித்தார்.
 
அந்த எலி நிரம்பிய வயிற்றுடன் சுகாதாரமாக இருந்ததோடு, அதன் எடை சுமார் 250 கிராம் இருந்தாக தெரிவித்த ரோவ் , புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட எலியை போன்ற எலிகள், சுலவேசி தீவில் இருந்ததாகவும், ஆனால் அவை இந்த வகை எலி அல்ல என்றும் கூறினார்.
 
"நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற பற்களற்ற எலிகள் கடந்த வருடம் இதே தீவில் கண்டுப்பிடிக்கப்பட்டன . அங்கு ஒரு குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சி காணப்படுகிறது" என்றும் அவர் கூறினார். இந்த எலிகள் தனித்தன்மை எதிர்பார்ப்புக்களை விஞ்சி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
 
"இதன் மூக்கு பன்றி மூக்கை ஒத்திருக்கின்றமை வெளிப்படையான தனித்துவம். அத்தோடு அதன் முகமும் நீண்டு காணப்படுகிறது. காதுகளும் பெரியதாக இருக்கின்றன. மூஞ்சுறு எலிகளில் (shrew rats) பொதுவாக அதிகம் காணப்படும், கீழ் பற்கள் இந்த புதிய வகை எலிகளுக்கு இருக்கின்றன" என்று ரோவ் தெரிவிக்கின்றார்.
 
இந்த எலிகளுக்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் மற்றைய பாலூட்டிகளைப் போலவே, பிறப்புறுக்குகளில் நீண்ட முடி இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இந்த எலிகள் பாதுகாக்கப்பட்டு, இந்தோனேஷியாவிலுள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்பபட்டுள்ளன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments