Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாரபட்சத்தை தடுக்கத் திட்டம்

பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாரபட்சத்தை தடுக்கத் திட்டம்
, வெள்ளி, 23 ஜனவரி 2015 (20:09 IST)
இந்தியாவில் பெண் சிசுக்கொலைகள் மற்றும் பெண் கருக்கொலைகள் உள்ளிட்ட பெண் பிள்ளைகளுக்கு எதிரான பரவலான பாரபட்ச நடவடிக்கைகளை தடுப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ளார்.
இவ்வாறான பாகுபாடான நடவடிக்கைகள் காரணமாக, ஒவ்வொரு 1000 ஆண் குழந்தைகளுக்கும் 918 பெண் குழந்தைகளே பிறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.
 
2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம், கடந்த 30 ஆண்டுகாலத்தில் 120 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
 
ஆண் குழந்தைகளையே விரும்பும் போக்கு முழு நாட்டுக்கும் கேடு விளைவுக்கும் நோய் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil