Webdunia - Bharat's app for daily news and videos

Install App

MH370 தேடல் பணிகள் நெருக்கடியான கட்டத்தில்

Webdunia
சனி, 19 ஏப்ரல் 2014 (17:34 IST)
காணாமல்போன மலேசிய விமானத்தை தேடும் பணிகளின் தற்போதைய கட்டத்தை ஒருவார காலத்துக்குள் முடித்துக் கொள்ளவுள்ளதாக அந்தப் பணிகளை ஒருங்கிணைத்துவரும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து வந்த ஒலிச் சமிக்ஞைகள் என்று நம்பப்படும் சத்தங்கள் உணரப்பட்ட பகுதியின் 10 கிலோமீட்டர் சுற்றுப் பரப்புக்குள் கடலின் தரைப்பகுதியை நீர்மூழ்கி ஒன்று துளாவி அங்குள்ளவற்றை பதிவுசெய்து வருகின்றது.
 
இந்து சமுத்திரத்தின் ஆழத்திற்கு ஏழாவது தடவையாகவும் அனுப்பப்பட்டுள்ள ப்ளூஃபின் ஆளில்லா நீர்மூழ்கி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000M(13,000 feet) ஆழத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
 
விமானத்தை தேடும் பணி ஒரு 'நெருக்கடியான நிலையை' அடைந்துள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

Show comments