சமூக மெய்நிகர் தளத்தை வெளியிட்ட மெடா - இனி பயனருக்கு பிடித்தபடி கேம் வடிவமைத்து விளையாடலாம்

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (12:27 IST)
மெடா நிறுவனம் ஹொரைசன் வேர்ல்ட்ஸ் (Horizon Worlds) என்ற சமூக மெய்நிகர் செயலியை வெளியிட்டுள்ளது.
 
ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெடா என மாற்றிய பிறகு, அந்நிறுவனத்தின் பெரிய அளவிலான முதல் வெளியீடு இதுவாகும். மெடாவெர்ஸ் மூலம், ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட டிஜிட்டல் உலகை, உருவாக்கும் திட்டத்தை முன்பே அறிவித்தது மெடா.
 
இந்த ஹொரைசன் வேர்ல்ட்ஸ் செயலி மூலம், ரோப்லாக்ஸ் உள்ளிட்ட செயலிகளில் உள்ளதுபோல், பயனர்கள் தங்களின் சொந்த மினி-கேம்களை உருவாக்க முடியும்.
ஆனால், இந்த செயலியில் பயனர்கள் நேரடியாக பணம் சம்பாதிக்க முடியாது. அதற்கு பதிலாக, மெடா நிறுவனம் 10 மில்லியன் அமெரிக்க டாலரை தனி நிதியாக ஒதுக்கியுள்ளது.
 
இந்த செயலியில் உள்ள போட்டிகளில் வெற்றி பெறும் சமூகக் குழுவுக்கு, அந்த 10 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி தொகுப்பிலிருந்து பரிசுகள் வழங்கப்படும்.
 
ரோப்லாக்ஸ் போன்ற செயலியில் கிரியேட்டர்கள் தங்களுடைய கேம்களை இநாப் கரன்சி எனப்படும் ஒருவகையான மெய்நிகர் பணத்துக்கு நேரடியாக விற்பதிலிருந்து இது வேறுபட்டதாகும்.
 
மெடா நிறுவனம் விற்பனை செய்யும் ஒக்யூலஸ் க்வெஸ்ட் 2 (Oculus Quest 2) ஹெட்செட்டை பயன்படுத்துபவர்கள் இந்த செயலியை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
 
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்கள், மெடா நிறுவனம் தனது பணியிடத்தை மையமாகக்கொண்டு உருவாக்கியது போன்ற, கால்கள் இல்லாத மிதக்கும் மெய்நிகர் அவதாரங்களை இதன்மூலம் உருவாக்கலாம்,.
 
"சிறந்த சமூக உலக்கை உருவாக்கும் சாதனங்களோடு, கிரியேட்டர்கள் பயன்படுத்த எளிமையான மெய்நிகர் தளத்தை உருவாக்குவதே ஹொரைசன் வேர்ல்ட்ஸ்-ன் இலக்காகும்" என மெடா தன் அறிவிப்பில் கூறியது.
 
"கடந்த ஓராண்டு காலத்தை அப்படிப்பட்ட சாதனக்களை உருவாக்கவும், கிரியேட்டர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இதனை மேம்படுத்தியும் உள்ளோம்." என, மெடா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மெய்நிகர் கேம்களில் இந்த அம்சங்கள் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, பயனர்கள் எவ்வித கூடுதல் தரவிறக்கங்கள் இல்லாமல் அதனை நேரடியாக பயன்படுத்த முடியும்.
 
பயனர்கள் தங்கள் மெய்நிகர் உலகத்தில் பறக்கலாம். மரங்களை உருவாக்கலாம், கட்டிடங்களை உருவாக்க ப்ளாக்குகளை பயன்படுத்தி, தங்களுக்கான டிஜிட்டல் உலகை உருவாக்கலாம். பிறகு ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்தலாம். விளையாடுபவர்களைச் சுற்றியுள்ள உலகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் கோட்கள் தான் மூலம் ஸ்கிரிப்ட் எனப்படுகின்றன. இவற்றைக் கொண்டு ஆட்டத்தின் விதிமுறைகளை வகுக்கலாம்.
இதேபோன்ற யோசனைகள் ஏற்கெனவே மெய்நிகர் தளங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. ரெக் ரூம் (Rec Room) என்றழைக்கப்படும் செயலி மூலம் பிளேயர்கள் தங்களின் சொந்த அறைகளை உருவாக்கி அங்கு விளையாட முடியும். விஆர் சாட் (VR Chat) செயலி மூலம் பயனர்கள் டிஜிட்டல் அவதாரங்களை உருவாக்க முடியும்.
 
அழைப்பு விடுத்தால் மட்டுமே ஏற்கும் வகையில் இந்த செயலி பீட்டா சோதனையில் இருந்தபோதே, ஆயிரக்கணக்கிலான டிஜிட்டல் உலகங்கள் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ளன.
 
இதில், ஷூட்டிங் கேம்கள், கப்பல்கள், பறக்கும் மந்திர துடைப்பங்கள், பிளாட்பார்மிங் கேம்கள் உள்ளிட்டவை அடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments