Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'லவ் ஜிகாத்' என்பது பாஜக, ஆர்எஸ்எஸ் இயற்றிய பிரசாரமா?'

'லவ் ஜிகாத்' என்பது பாஜக, ஆர்எஸ்எஸ் இயற்றிய பிரசாரமா?'
, வியாழன், 2 அக்டோபர் 2014 (13:39 IST)
இந்தியாவில் முஸ்லிம்கள் அல்லாத இளம் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதல் வயப்படுத்தி, திருமணம் செய்து, பின்னர் அவர்களைத் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் செய்தி ஊடகம் ஒன்றிடம் வெளியிட்டுள்ளமை தொடர்பாக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.
 
முஸ்லிம்கள் அல்லாத இளம் பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நோக்கோடு, முஸ்லிம் இளைஞர்கள் போலியாக காதல் செய்து திருமணம் செய்துகொள்வதாக குற்றஞ்சாட்டப்படும் செயலே ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் இந்தியாவில் சிலரால் அழைக்கப்படுகின்றது.
 
‘லவ் ஜிஹாத்’ என்ற இந்த நடவடிக்கை இந்தியாவில் நடைபெற்றுவருவதாகவும், இது ஒரு சர்வதேச சதி என்றும் பாஜக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யோகி அதியநாத் சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
 
அதனையடுத்து உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சில இந்து மத அமைப்புகள், அம்மாநில இந்து மதப்பெண்கள் முஸ்லிம்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருந்தன.
 
இந்நிலையில் ‘லவ் ஜிஹாத்’ பிரச்சனை தொடர்பாக செய்தி ஊடகம் ஒன்றிடம் பேசிய தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம், லவ் ஜிஹாத் என்பது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் கட்டியமைக்கப்பட்ட ஒரு கருத்தல்ல என்றும், அது இருவேறு மத சமூகங்களுக்கிடையே, அரிதாக நடைபெறும் திருமணங்களுக்கு எதிரான ஒரு சமூக சீற்றமே என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
"லவ் ஜிஹாத்" என்ற வார்த்தையை இயற்றி, அதனை பிரசாரப்படுத்தும் செயல்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஈடுபட்டுவருவதாகவும் அந்த அமைப்புகள் தப்பிக்க ஏதுவாக இந்தப் பிரச்சனையை தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் திசைதிருப்புவதாகவும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூறியுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil