Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிறுவன தலைவரின் மகளால் முட்டியிடச் செய்யப்பட்ட விமானச் சிப்பந்தி

நிறுவன தலைவரின் மகளால் முட்டியிடச் செய்யப்பட்ட விமானச் சிப்பந்தி
, ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (05:26 IST)
கொரியன் ஏர் விமான நிறுவனத்தின் தலைவரின் மகளால் அவமதிக்கப்பட்டு, முட்டியிடச் செய்யப்பட்டு, விமானத்தில் இருந்து இறங்கச் செய்யப்பட்டமை குறித்து அந்த நிறுவன விமான சிப்பந்தி ஒருவர் முதல் தடவையாக பேசியுள்ளார்.


 

 

விமானத்தில் கொறிப்பதற்காக மகதமியா பருப்புகளை வழங்குவது வழக்கம்.
 
பொதுவாகவே வேர்க்கடலை, முந்திரிகை, மகதமியா போன்றவற்றை விமான பயணத்தில் பரிமாறும் போது அவை கொட்டி விடக் கூடாது என்பதற்காக அவற்றை ஒரு பையில் போட்டு வழங்குவது வழக்கம்.
 
ஆனால், தட்டில் அல்லாமல் ஒரு பையில் இட்டு அவற்றை தனக்கு பரிமாறியதற்காக கொரியன் ஏர் விமான நிறுவனத்தில் முன்பு மூத்த நிறைவேற்று அதிகாரியாகவும் முன்பு இருந்த அந்த நிறுவனத்தின் தலைவரின் மகளான ஹீத்தர் சோ என்பவர் மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளார்.
 
அந்த விமான சிப்பந்தியை திட்டி, அவரை முட்டியில் இருக்கவும் செய்துள்ளார்.
பின்னர், அந்த நொருக்குத் தீனியை பரிமாறிய விமானச் சிப்பந்தி அந்த விமானத்தில் இருந்து பலவந்தமாக இறக்கப்பட்டுள்ளார்.
 
தனக்கு நிகழ்ந்த விசயம் குறித்து மாற்றிக் கூறுமாறு நிறுவன அதிகாரிகள் தன்னை கேட்டுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
 
தென்கொரியாவில் பெரிய வணிக நிறுவனங்களின் தலைவர்கள் மிகவும் அரக்கத்தனமாகவும், பொறுப்பற்ற வகையிலும் நடந்து கொள்வது குறித்த குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், அந்த நாட்டு மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் கோபத்தை கிளறியுள்ளது.
 
தற்போது ஹீத்தர் சோவும், அவரது தந்தையும் இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்பு கோரியுள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil