Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் கட்சியின் பாத்திரங்கள், பனியன் பறிமுதல் - மதிப்பு ரூ. 1 லட்சம்

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (08:03 IST)
கடலூரில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் அச்சிட்ட பனியன், சில்வர் பாத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம்.
 
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பறக்கும் படையினர் மற்றும் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கடலூரில் நிலையான கண்காணிப்பு குழுவினர் கடலூர் அருகே பெரியக்காட்டுப்பாளயம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.1 லட்சம் மதிப்பிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் மற்றும் புதுச்சேரிக்கு உள்பட்ட ஏம்பலம் தொகுதி வேட்பாளர் பெயர் அச்சிடப்பட்ட பனியன், மற்றும் சில்வர் பாத்திரங்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
 
இதையடுத்து போலீஸார் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து கடலூர் வட்டாட்சியர் பலராமனிடம் ஒப்படைத்தனர் என்கிறது அந்தச் செய்தி.
 
அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
 
சென்னையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர் என தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
 
இதில் அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக என தகவல் வெளியாகியுள்ளது.
 
21 தொகுதிகளை அதிமுக ஒதுக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால் பாஜக தரப்பில் 30க்கும் அதிகமான தொகுதிகள் கேட்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது என்கிறது தினத்தந்தி.
 
'விவசாயிகள் போராட்டத்துக்கு தலித்துகள் ஆதரவு'
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு தலித் பஞ்சாயத்து குழுக்களை சேர்ந்த பிரதிநிதிகள் ஆதரவு தர உறுதி அளித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
தலித் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் ராஜ் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தலித்துகள் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைந்து புதிய வேளாண் சட்டங்களை இந்திய அரசு திரும்பப் பெறும்வரை போராடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
விவசாயிகள் போராட்டத்தால்தான் இந்த "சர்வாதிகார அரசை முடிவுக்கு கொண்டுவர முடியும்" என்றும் இத்தகைய போராட்ட இயக்கத்தில் அனைத்து குடிமக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் உதித் ராஜ் கூறியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
 
முன்னாள் இந்திய வருவாய் பணிகள் அதிகாரியான உதித் ராஜ், ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளில் பணி அனுபவத்தின் அடிப்படையில் காலம் தாழ்த்தி இணையும் 'லேட்டரல் என்ட்ரி' முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
இட ஒதுக்கீடு மூலம் பலன் பெரும் பிரிவுகளுக்கு மட்டுமல்லாமல் பொதுப் பிரிவினருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments