ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் (Jumanji: The Next Level) - சினிமா விமர்சனம்

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (20:09 IST)
1995ல் வெளிவந்த ஜுமான்ஜி படத்தின் மூன்றாவது ஃப்ரான்சைஸ். முந்தைய படமான ஜுமான்ஜி: வெல்கம் டூ த ஜங்கிள் (Jumanji: Welcome to the Jungle) படத்தின் கதை நிகழ்ந்து ஒரு வருடத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் கதை நிகழ்கிறது.

ஸ்பென்சர், ஃப்ரிட்ஜ், மார்தா, பெதானி ஆகியோர் முந்தைய ஜுமான்ஜி விளையாட்டிற்குப் பிறகு அவரவர் வழியில் சென்றுவிடுகின்றனர். தன் காதலியான மார்த்தாவை சந்திப்பதையே தவிர்க்கிறான் ஸ்பென்சர். பிறகு எல்லோரும் ஸ்பென்சரின் வீட்டிற்கு வந்து பார்த்தால், மீண்டும் ஜுமான்ஜி விளையாட்டிற்குள் சென்றிருப்பது தெரிகிறது. பிறகு நண்பர்கள், ஸ்பென்சரின் தாத்தா ஆகியோரும் விளையாட்டிற்குள் செல்கிறார்கள்.

அந்த விளையாட்டிற்குள் புதிய சவால் காத்திருக்கிறது. கொடூரமான போர்த் தளபதியான கொடூரன் யுர்கனிடம் ஃபால்கனின் இதயம் என்ற நெக்லஸ் இருக்கிறது. அந்த நெக்லஸை சூரிய ஒளியில் காண்பித்தால்தான் வயல்களில் கதிர்கள் விளையும். ஆனால், அதை மறைத்து இருளில் வைத்திருக்கிறார் கொடூரன் யுர்கன். அவனை வீழ்த்தி, அந்த நெக்லஸை மீட்டு, மீண்டும் சூரிய ஒளியில் காட்டினால்தான் ஜுமான்ஜி நிலப்பரப்பைக் காப்பாற்ற முடியும். அப்படிச் செய்தால்தான், அவர்கள் விளையாட்டிலிருந்து வெளியேறி, நிஜ உலகிற்குத் திரும்ப முடியும்.

முதல் ஜுமான்ஜி படம் ரொம்வுமே ரசிக்கும்படி இருந்தது. இரண்டாவது படம் சற்றுத் தொய்வாக இருந்த நிலையில், இந்தப் படத்தில் மீண்டும் முந்தைய கலகலப்பிற்குத் திரும்பியிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக, ஒவ்வொருவரும் உடல் மாறுவதும் அதைத் தொடரும் உரையாடல்களும் அட்டகாசமாக இருக்கிறது. முந்தைய படம், வெறும் சாகசங்களில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்த நிலையில், இந்தப் படம் மனித உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருக்கிறது.

சாகசங்கள், கிராஃபிக் காட்சிகளைப் பொறுத்தவரை, கேட்கவே வேண்டாம்; குழந்தைகள் நிச்சயம் குதூகலமடைவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த இரண்டாம் பாக, மூன்றாம் பாக திரைப்படங்கள் கொலை வெறியை ஏற்படுத்தின. ஆனால், இந்தப் படம், இன்னும் இரண்டு பாகம் வந்தால் பரவாயில்லை என்று சொல்லவைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments