Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனப் பொருளாதார தடுமாற்றம்: ஆசிய பங்குசந்தைகள் பெரும் சரிவு

சீனப் பொருளாதார தடுமாற்றம்: ஆசிய பங்குசந்தைகள் பெரும் சரிவு
, திங்கள், 24 ஆகஸ்ட் 2015 (14:51 IST)
சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறைவதாக கவலைகள் எழுந்துள்ள நிலையில், அந்நாட்டின் பங்கு சந்தைகள் தொடர்ந்தும் வேகமான சரிவைக் கண்டுவருகின்றன.

பங்கு சந்தைகள் ஸ்திரமில்லாமல் இருப்பது வர்த்தகர்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது. ஒருவாரகாலமாகவே கணிசமான இழப்புகளை எதிர்கொண்டிருந்த ஷாங்காய் பங்கு சந்தை சுட்டெண் மேலும் எட்டரை சதவீதப் புள்ளிகள் சரிவோடு இன்றைய வர்த்தகத்தை நிறைவுசெய்தது.

கடந்த ஜூன் மாதத்தின் நடுப்பகுதியோடு ஒப்பிடுகையில் சீன பங்குசந்தைகள் தமது மதிப்பில் மூன்றில் ஒரு பாகத்துக்கும் கூடுதலான மதிப்பை இழந்துள்ளன.வேறு பல ஆசிய நாடுகளிலும் திங்களன்று பங்கு சந்தைகள் சரிவைக் கண்டன. ஐரோப்பிய பங்கு சந்தைகளும் குறிப்பிடத்தகுந்த வீழ்ச்சியுடனேயே இன்றைய வர்த்தகத்தை ஆரம்பித்துள்ளன.

சீனாவில் மக்களின் ஓய்வூதிய சேமிப்பு நிதியை பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்திருந்தும், பங்கு சந்தை சரிவைக் தடுப்பதில் அவ்வறிவிப்பு உதவியதாகத் தெரியவில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil