Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய சுதந்திர தினம்: பாகிஸ்தானுக்கு பிரிவினையின்போது முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதா?

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (00:53 IST)
பாகிஸ்தான் தமது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14ம் தேதி கொண்டாடும்போது, இந்தியா அடுத்த நாளான ஆகஸ்டு 15 அன்று ஏன் கொண்டாடுகிறது? பிரிட்டனிடமிருந்து ஒரே நாளில் சுதந்திரம் கிடைத்தாலும், ஒன்றாக இருந்து இரண்டாக பிரிந்த இரு நாடுகளில் ஏன் வெவ்வேறு நாட்களில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது?
 
உண்மையில் பாகிஸ்தானுக்கு ஒரு நாள் முன்னரே சுதந்திரம் வழங்கப்பட்டு, இந்தியாவுக்கு அடுத்த நாள் சுதந்திரம் வழங்கப்பட்டதா?
 
சுதந்திர தினம் பற்றிய இந்தக் கேள்விக்கு பதிலைத் தெரிந்து கொள்வதற்கு முன்னதாக என்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்.
 
ஒரு தர்பூசணிப்பழத்தை கத்தியால் வெட்டினால், அது உடனே இரு துண்டாகுமா? அல்லது அதன் ஒரு துண்டு செவ்வாய்க்கிழமையன்றும், மறுபாதி புதன்கிழமையன்றும் கீழே விழுமா? இந்த சந்தேகம் முட்டாள்தனமாக தோன்றுகிறதா? ஆனால், இது ஆழமான கேள்வி, வேடிக்கை விளையாட்டல்ல.
 
சரி மற்றொரு உதாரணம் சொல்கிறேன். 'இந்திய சுதந்திர சட்டத்தின்'படி (Indian Independence Act) பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் 1947 ஆகஸ்டு 14 மற்றும் 15 ஆம் நாள்களுக்கு இடையே நள்ளிரவு 12 மணிக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. பிறகு ஏன் ஒரு நாடு 14ம் தேதியும், இன்னொன்று அடுத்த நாளும் சுதந்திரத்தை கொண்டாடுகின்றன?
 
பாகிஸ்தான் உருவான பிறகு, முகமது அலி ஜின்னா, பாகிஸ்தான், இந்தியா இரு நாடுகளும் ஒரே நாளில், ஒரே சமயத்தில் சுதந்திரம் பெற்றதாகவே நினைத்துக் கொண்டிருந்தார்.
 
ஒரே சமயத்தில் விடுதலை
 
ரேடியோ பாகிஸ்தானில் ஜின்னாவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தன்றும் ஒலிபரப்பப்படும். அந்த வாழ்த்துச் செய்தியில், 'ஆகஸ்ட் 15ம் தேதி காலையில் சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்' என்ற வாசகங்களே இடம்பெற்றிருக்கும்.
 
ஆனால், ஜின்னாவின் பதிவு செய்யப்பட்ட வாழ்த்துச் செய்தி, தற்போது ஆகஸ்ட் 15க்கு பதிலாக ஆகஸ்ட் 14ஆம் தேதியே ஒலிபரப்பப்படுகிறது.
 
பாகிஸ்தான் உருவான பிறகு, இரண்டு ஆண்டுகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் சுதந்திரம் பெற்ற 13 மாதங்களில் ஜின்னா மறைந்த பிறகு, சுதந்திர தினத்தை 24 மணி நேரம் முன்னதாக யார் மாற்றியது என்று தெரியவில்லை.
 
அமெரிக்காவின் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம், இரவு முழுவதும் விளையாட்டு பொருட்களை சார்ஜ் ஏற்றுவதை தவிர்க்குமாறு கூறுகிறது.
 
பிரிவினையின்போது பாகிஸ்தான் அரசு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு புது டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கராச்சி புறப்பட்ட ரயில்.
 
ஜின்னாவின் மறைவுக்கு பிறகு பாகிஸ்தானின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 14 அன்றே கொண்டாடப்படுகிறது.
 
பாகிஸ்தானின் சுதந்திர தினம் மட்டும் பின்னதாக செல்லவில்லை, எல்லாமே பின்னதாகவே சென்றது. பாகிஸ்தான் சுதந்திர தினத்தை ஒரு நாள் முன்னதாக கொண்டாடுவதற்கான காரணத்தை யாரும் கேட்பதும் இல்லை, யாரும் சொல்வதும் இல்லையே... அது ஏன்?
 
இந்து, முஸ்லிம், சீக்கியர்கள், கிறித்துவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தானில் சம உரிமை உண்டு என்று ஜின்னா அறிவித்தார். ஒருவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம், அதைப்பற்றி அரசுக்கு கவலையில்லை என்று ஜின்னா தெரிவித்தார்.
 
இது என்ன புதுக்கதை என்ற ஆச்சரியம் எழுந்தது. அப்படியென்றால் அவர் பாகிஸ்தான் என்ற தனிநாட்டை ஏன் உருவாக்க பாடுபட்டார்? சரி, ஜின்னா கேட்ட பாகிஸ்தான் உருவாகிவிட்டது, அதை எங்களுக்கு சாதகமான நாடாக மாற்றிவிட்டோம்.
 
எல்லைகளை பாதுகாப்பது மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உத்தரவுகளை பாதுகாப்பது மட்டுமே ராணுவத்தின் வேலை என்று ஜின்னா தெரிவித்தார். ராணுவத்திற்கு அரசியலில் எந்தவிதமான தொடர்பும் இருக்கக்கூடாது என்றும் கூறினார்.
 
ஆனால் பாகிஸ்தானில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை ராணுவ ஆட்சி நடைபெற்றது.
 
புதிய தலைமுறைகளின் சவால்கள்
 
நாட்டை உருவாக்குவது வேறு, அதை நிர்வகிப்பது வேறு. இனி உங்களுடைய கல்லறையில் அமைதியாக துயில் கொள்ளுங்கள் ஜின்னா, நாங்கள் உமது பாகிஸ்தானை இனி பார்த்துக்கொள்வோம்.
 
சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த தலைமுறையினரின் கைகளில் தற்போது பாகிஸ்தான் இருக்கிறது. தங்கள் முன்னோர்களை விட அதிகம் கல்வி பயின்ற, சுற்றியிருக்கும் உலகத்தை நன்றாக புரிந்துகொண்ட மேம்பட்ட தலைமுறையே நாட்டை நிர்வகிக்கிறது.
 
இந்தியா பாகிஸ்தான் விடுதலைக்கு சில நாள்கள் முன்னதாக தில்லி வைஸ்ராய் இல்லத்தில் மௌன்ட்பேட்டனை சந்தித்த முகமது அலி ஜின்னா.
 
இந்தியா பாகிஸ்தான் விடுதலைக்கு சில நாள்கள் முன்னதாக தில்லி வைஸ்ராய் இல்லத்தில் மௌன்ட்பேட்டனை சந்தித்த முகமது அலி ஜின்னா.
 
ஆனால், இப்படிப்பட்ட தலைமுறையின் நிர்வாகத்திலும், நாடு 1947 ஆகஸ்ட் 14ம் தேதியன்று இருந்ததைப் போன்றே, பழமைவாதத்தில் மூழ்கியிருக்கிறது, பாதுகாப்பற்று இருக்கிறது.
 
பாகிஸ்தான் உருவான இரண்டு நாட்களுக்கு பிறகு வெளியான 'டான்' நாளிதழின் நகலை இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அதன் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த வர்த்தக விளம்பரம் இது, 'ஆஸ்திரியாவின் பிரபல கேபரே டான்சரின் ஆட்டத்தை பாருங்கள், இடம் குறைவாக இருப்பதால் உடனே பதிவு செய்யவும். மதுவுக்கும் சேர்த்து டிக்கெட் விலை இரண்டரை ரூபாய் மட்டுமே'.
 
தற்போது 70வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், பாகிஸ்தானின் உருது அல்லது ஆங்கில பத்திரிகையின் முதல் பக்கத்தில் அல்ல, 38வது பக்கத்தில் கூட இதுபோன்ற விளம்பரத்தை வெளியிட முடியுமா? உங்கள் கருத்து சுதந்திரம் ஒட்ட நறுக்கப்பட்டு உங்கள் கைகளிலேயே கொடுக்கப்படும்.
 
அடுத்து என்ன செய்யலாம் என்று சுதந்திர தினத்தன்று சிந்திக்கவேண்டும். ஆனால் சுதந்திர தினத்தன்று இன்னமும் என்ன நடக்கப் போகிறதோ? என்று நாங்கள் யோசிக்கிறோம்.
 
பேச்சு சுவாரசியத்தில் நான் ஒரு விசயத்தை சொல்லவே மறந்துவிட்டேன்.
 
பாகிஸ்தான் மற்றும் இந்திய குடிமக்களுக்கு ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 15 ஆம் நாளில் சுதந்திர தின வாழ்த்துகள்.
 
(2014 ஆகஸ்ட் 14ம் நாளன்று பிபிசி இந்தியில் வெளியிடப்பட்ட வுஸ்துல்லா கானின் மொழியாக்கம் செய்யப்பட்ட கட்டுரை இது)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments