Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பை கிரிக்கெட்: 76 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட்: 76 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்தியா
, ஞாயிறு, 15 பிப்ரவரி 2015 (17:33 IST)
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்திவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.


 

பாகிஸ்தான் அணியை இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அடிலெய்ட் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி தமது 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 107 ரன்களை எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 224 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி நான்கு விக்கெட்டுக்களயும், உமேஷ் யாதவ் மற்றும் மோகித் ஷர்மா தலை இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதர இரண்டு விக்கெட்டுகளை ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பெற்றனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு ஆட்ட நிலவரத்தை பார்க்க - http://tamil.webdunia.com/cricket-score-card/default.htm
For Full Score board -http://tamil.webdunia.com/cricket-score-card/default.htm

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil