Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா – பாகிஸ்தான்: அணு ஆயுத நாடுகளுக்கிடையே அதிகரித்துள்ள பதற்றம் உலக நாடுகளை எப்படி பாதிக்கும்?

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (14:58 IST)
உலகிலேயே மிகவும் ராணுவமயமான மண்டலங்களில் ஒன்று காஷ்மீராகும். அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மிகவும் கொந்தளிப்பான பகுதியாக இது இருந்து வருகிறது.இந்த பிரதேசத்தில் நிகழ்ந்துள்ள வன்முறை இதன் ஸ்திரதன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
கடந்த வாரம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய படைப்பிரிவுகள் மீது பல தசாப்தங்களில் காணாத மிகவும் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சண்டையில் 50 இந்திய படையினர் கொல்லப்பட்டனர்.
 
கடந்த பத்தாண்டுகளில் இந்த பிரதேசத்தில் நிகழ்ந்த உயிரிழப்பின் எண்ணிக்கையை விட இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையே முன்னிலை பெறுகிறது.
 
2018ம் ஆண்டு பொது மக்கள், பாதுகாப்பு படைப்பிரிவுகள் மற்றும் தீவிரவாதிகள் உள்பட 500-க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
 
சுதந்திரம் அடைந்தது முதல் காஷ்மீர், இந்தியாவுக்கும், பாகிஷ்தானுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது.
 
சீனா ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
 
கடந்த வாரம் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் 40 இந்திய சிப்பாய்கள் உயிரிழப்பு, அதனை தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சண்டைகள் ஆகியவை, விரைவில் இந்திய பாகிஸ்தான் உறவில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையை தகத்துள்ளன.
 
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வருகின்ற தீவிரவாத குழுக்களை இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
 
இதன் காரணமாக, இந்தியாவின் சில நகரங்களில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. கோபமடைந்த கும்பல்கள் காஷ்மீர் மாணவர்களையும், வணிகர்களையும் இலக்கு வைத்து தாக்கியுள்ளன.
 
இந்தியாவின் கட்டுபாட்டுக்குள் இருக்கின்ற காஷ்மீரில் இந்த வார இறுதியில் செல்பேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
 
இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளாகும். இந்த நாடுகளுக்கு இடையே ஏற்படும் எந்தவொரு புதியதொரு மோதலும் புதிய கோணத்தை எடுக்கும்.
 
காஷ்மீரை தங்களின் கட்டுப்பாட்டில் எடுக்கின்ற இந்திய பாகிஸ்தான் மோதலின் வலிமையை உள்ளூர் மக்கள் முழுமையாக உணரவில்லை.
 
இரண்டு போர்கள் (1947 மற்றும் 1965), பல ஆயுத நடவடிக்கைகள், ராணுவம் மற்றும் பொது மக்கள் மீது எண்ணிக்கையற்ற தாக்குதல்கள் மற்றும் அண்டை நாடுகளோடு பதற்றம் அதிகரிப்பு ஆகியவை இதனால் நிகழந்துள்ளன.
 
இதன் விளைவாக, இந்த பிரதேச பொருளாதாரம் வலுவற்றதாக உள்ளது. வேலைவாய்ப்பில்லா திண்டாட்டம் அதிகரிப்பு மற்றும் அரசியல் ஸ்திரமின்மையால் அல்லல்பட்டு வருகிறது.
 
 
தீவிரவாத செயல்பாடுகளுக்கு வளமாதொரு தளமாக இது உருவாகி வருவதாக பிரிட்டன், நாடாளுமன்ற உறுப்பினரும், காஷ்மீர் நிபுணருமான லார்டு நசீர் அகமத் கூறியுள்ளார்.
 
காஷ்மீர் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாத குழு மற்றும் அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்கள் போன்ற குழுக்களை கண்காணிப்பில் வைத்து கொள்வதை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கும் என்று லார்டு அகமத் போன்ற நிபுணர்கள் நம்புகின்றனர்.
 
இந்த பிரதேசத்தை ஆள்பவர் யார்?
 
இந்தியா சுதந்திரமடையும்போது பெரும்பாலான இந்துக்கள் வாழும் இந்தியா மற்றும் முஸ்லீம் பெரும்பான்மையான பாகிஸ்தான் என்று நாட்டை பிரித்த 1947ம் ஆண்டு பிரிட்டன் ஆட்சியின் முடிவிலேயே காஷ்மீர் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதியாகவே இருந்தது.
 
இந்தியாவோடு அல்லது பாகிஸ்தானோடு இணைவது தொடர்பாக காஷ்மீர் மன்னர் பெரும் தயக்கத்தை வெளிப்படுத்தினார். வாக்கெடுப்புக்கு அங்கு இடமிருக்கவில்லை.
 
எனவே, அவர் இந்தியாவை தேர்ந்தெடுத்ததால், எல்லை தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் இரண்டு ஆண்டுகள் போர் நடைபெற்றது.
 
பின்னர் போர்நிறுத்தம் உருவாகியது. பாகிஸ்தான் அதனுடைய துருப்புக்களை அகற்றிவிட மறுக்கவே, காஷ்மீர் இரண்டாக பிரிந்தது.
 
இந்தியாவும், பாகிஸ்தானும் முரண்பட்டு இருந்த நிலையில், 1950களில் காஷ்மீரின் கிழக்கு பகுதியிலுள்ள அக்சாய் சின் என்று அறியப்படும் பிரதேசத்தை சீனா படிப்படியாக ஆக்கிரமித்து கொண்டது.
இரண்டாவது இந்திய பாகிஸ்தான் போர் 1965ம் ஆண்டு நடைபெற்றது. 1980களுக்கும், 1990களுக்கும் இடையில் இந்தியாவின் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி ஏற்பட்டு, அதிக மக்களின் போராட்டங்களும், பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்களும் தோன்றின.
 
1999ம் ஆண்டு பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற ஆயுதப்படையோடு மோசமானதொரு சிறியதொரு சண்டையை இந்தியா நடத்தியது. அந்நேரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களை அணு ஆயுதங்களை கொண்டுள்ள நாடுகளாக அறிவித்திருந்தன.
 
காஷ்மீர் மக்கள் விரும்புவது என்ன?
 
பிப்ரவரி 14ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் பல தசாப்பதங்களில் காணாத மோசமான ஒன்றாகும்.
 
1950கள் தொடங்கி, காஷ்மீரில் மக்கள் கருதறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இந்த பிரதேசத்திலுள்ள வாக்காளர்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவை கூறி வருகிறது.
 
தொடக்கத்தில் இந்த கருத்துக்கு ஆதரவு இந்தியா தெரிவித்த்து, இந்திய நிர்வாக மாநிலமாக ஜம்மு காஷ்மீரில் நடத்தப்படும் தேர்தல்கள் இந்தியாவுக்கு அது அளிக்கும் ஆதரவையே காட்டுகிறது என்று கூறி, கருத்தறியும் வாக்கெடுப்பு அவசியமில்லை என்று இந்தியா பின்னர் கூறிவிட்டது.
 
காஷ்மீர் உயிரிழப்புகள் நமக்கு உணர்த்துவது என்ன?
 
‘’இந்தியா எங்களை தாக்கினால் பதிலடி தருவோம்’’ -இம்ரான்கான்
 
ஆனால், அங்கு வாழும் மக்கள் இந்தியாவால் ஆட்சி செய்யப்படுவதை விரும்பவில்லை, அதறகு மாறாக, சுதந்திரமான நாடு அல்லது பாகிஸ்தானோடு இணைய விரும்புவதாக கூறி பாகிஸ்தான் இந்தியா கூறுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
 
இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு காஷ்மீரில் 60 சதவீதத்திற்கு மேலான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரே மாநிலம் காஷ்மீராகும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments