கனடாவில் கல்வி கற்க செல்லும் இந்திய மாணவர்களின் கனவு சிதைவது எப்படி?

Sinoj
செவ்வாய், 19 மார்ச் 2024 (23:16 IST)
கனடாவில் உயர் கல்வி பயிலும் பல இந்திய மாணவர்கள் படித்து முடித்த பின்னர் வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள் அதேநேரம், பல இளைஞர்கள் போலி முகவர்கள் மற்றும் சில தனியார் கல்வி நிறுவனங்களின் வலையில் சிக்கிக்கொள்கின்றனர்.
 
பஞ்சாபிலிருந்து கனடாவுக்கு செல்ல சுமார் 19 லட்சம் ரூபாயை சஹஜ்பிரீத் சிங் செலவு செய்துள்ளார். ஆனால், கடந்த நான்கு மாதங்களில் ஒருமுறை கூட அவர் கல்லூரிக்கு சென்றதில்லை.
 
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2023 இல் கனடாவிற்கு வந்த சர்வதேச மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள். மூன்றாவது இடத்தில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மாணவர்களும் நான்காம் இடத்தில் நைஜீரியாவை சேர்ந்தவர்களும் உள்ளனர்.
 
ஆனால் கடந்த ஓராண்டில் நேபாளத்தில் இருந்து கனடாவுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.
 
இந்நிலையில் இங்கு வரும் பல மாணவர்களும் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments