Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் ஃபோர்ட் விமான விபத்தில் காயமடைந்தார்

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2015 (12:57 IST)
லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சிறு விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் அதை ஓட்டிச் சென்ற ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் ஃபோர்ட் காயமடைந்தார்.
72 வயதாகும் ஹாரிசன் போர்ட், இன்டியானா ஜோன்ஸ், ஸ்டார் வார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அவர் ஓட்டிச் சென்ற பழங்காலத்து சிறிய விமானத்தின் எஞ்சின் திடீரென செயலிழந்துவிடவே, வெனிஸ் கால்ஃப் மைதானத்தில் விமானம் மோதி விபத்திற்குள்ளானது.
உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹாரிசன் போர்ட் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அவருக்கு ஏற்பட்ட காயங்களால் உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை. முழுமையாக குணமடைந்துவிடுவார் என எதிர்பார்க்கிறோம்" என அவரது நிர்வாகி தெரிவித்துள்ளார்.
ஹாரிசன் போர்டிற்கு என்ன மாதிரி காயங்கள் ஏற்பட்டன என்பது குறித்து செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், அவரது தலையில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
1942ஆம் வருடத்து ரையன் ஏரோநாட்டிகல் எஸ்டி3கேஆர் விமானத்தில் ஹாரிசன் போர்ட் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே எஞ்சின் செயலிழந்தது. இதையடுத்து அவர் உடனடியாக ரன்வேயை நோக்கி திரும்பினார். ஆனால், அதற்கு முன்பாகவே அருகில் இருந்த கோல்ஃப் மைதானத்தில் விமானம் மோதியது.
 
பெரிய வெடிச் சத்தமோ, எதுவுமோ கேட்கவில்லை. ஒரு கார் மரத்தில் மோதியதைப் போல இருந்தது" என அப்போது அங்கே கால்ஃப் விளையாடிக்கொண்டிருந்த ஒருவர் தெரிவித்தார். விமானம் விபத்திற்குள்ளானதும், கால்ஃப் மைதானத்தில் இருந்த இரண்டு மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். ஸ்டார் வார்ஸ் திரைப்பட வரிசையில் அடுத்த படமான ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் படத்தில் நடிக்க ஹாரிசன் போர்ட் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments