Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் பேக்கரி பொருட்களில் பொட்டாசியம் ப்ரமேட்டுக்கு தடை

இந்தியாவில் பேக்கரி பொருட்களில் பொட்டாசியம் ப்ரமேட்டுக்கு தடை
, புதன், 22 ஜூன் 2016 (13:40 IST)
புற்றுநோயை உருவாக்கும் ரசாயனத்தை பேக்கரி பொருட்களில் பயன்படுத்த இந்தியாவின் இந்திய உணவு பாதுகாப்புத் தர ஆணையம் தடை விதித்துள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 

 
டெல்லியில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் 84% பொட்டாசியம் ப்ரமேட் இருப்பது ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவை இந்திய இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் எடுத்துள்ளது.
 
அந்த ஆய்வில் பொட்டாசியம் ப்ரமேட் என்ற ரசாயனம் ''புற்று நோயை விளைவிக்கும்'' என்று தெரியவந்துள்ளது. உணவு பாதுகாப்பு தர ஆணையம் இந்த ரசாயனத்தின் மீது தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
 
webdunia

 
''இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் பொட்டாசியம் ப்ரமோடை தடை செய்துள்ளது'' என்று ஆணையத்தின் தலைவர் பவன் குமார் அகர்வால் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
 
பேக்கரி பொருட்களில் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் ஐயோடேட் என்ற விஷத்தன்மை வாய்ந்த ரசாயனத்தையும் அரசு தடை செய்ய வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக இந்த ஆய்வை நடத்திய, டெல்லியைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆய்வு அமைப்பான அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) தெரிவித்துள்ளது.
 
webdunia

 
''பொட்டாசியம் ஐயோடேடை பொருத்தவரை அதை ஒரு அறிவியல் குழு ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது'' என்று திங்களன்று அகர்வால் கூறியுள்ளார். இந்த இரண்டு ரசாயன்ங்களுமே பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவின் பேக்கரிகளில் இவை பயன்படுத்தப்படுவதை இந்தியா தொடர்ந்து அனுமதித்து வருகிறது.
 
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் 38 ரொட்டி மற்றும் பிற நொதிக்க வைக்கப்பட்ட உணவு மாதிரிகளை சில்லறைக் கடைகள் மற்றும் துரித உணவுக் கடைகளில் இருந்து எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியது.
 
''84% சதவீதத்திற்கு மேலான மாதிரிகளில் பொட்டாசியம் ப்ரமேட்/ஐயோடேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'' என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’மகராஜ்’ யானை கொலை செய்யப்பட்டுள்ளது - வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றச்சாட்டு