Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் ஜிடிபி சரிவு: அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் நிலை என்ன?

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (14:06 IST)
உலகளவில் மிகப்பெரிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமலாக்கப்பட்ட முடக்கநிலையால் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

 
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9சதவீதம் சுருங்கியிருப்பதாக இந்திய அரசு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
 
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் முதல் மூன்று மாதங்களில், அதாவது 2019-2020ஆம் நிதியாண்டில் கடைசி காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 3.1% இருந்தது. இந்தக் காலாண்டின் கடைசி வாரத்தில்தான் நாடு முழுவதும் முடக்கநிலை அமலானது
 
ஓ.இ.சி.டி என்று பரவலாக அறியப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றத்துக்கான கூட்டமைப்பின் தரவுகளின்படி அமெரிக்காவில், 2020ம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டில் பொருளாதாரம் 9.1 சதவீதம் சுருங்கியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று மற்றும் மரணங்கள் அடிப்படையில் உலகிலேயே முதல் இடத்தில் இருக்கிற அமெரிக்காவில் இதுதான் நிலைமை.
 
அதற்கு அடுத்தபடியாக ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 11.3, 17.7 மற்றும் 18.9 சதவீதம் என்ற அளவில் சுருங்கியுள்ளது. இந்தியாவைப் போலவே பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு ஐரோப்பிய நாடுகளின் ஜிடிபியும் இதே காலத்தில் 20 சதவிகிதத்துக்கும் மேல் சுருங்கியுள்ளது.
 
கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இருந்த ஜி.டி.பி. அளவுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இதே காலத்தில் பிரிட்டனின் ஜிடிபி -21.7 சதவிகிதமும், ஸ்பெயினின் ஜிடிபி 22.1 சதவிகிதமும் சரிவடைந்துள்ளது.
 
ஆசிய நாடான ஜப்பானில் இதே காலகட்டத்தில் -10 சதவீதம் எனும் விகிதத்தில் ஜிடிபி சரிவைச் சந்தித்துள்ளது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது நேர்மறையாக உள்ளது.
 
மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட முதல் ஏழு நாடுகளில் (ஜி-7 நாடுகள்), ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நேர்மறையான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட ஒரே நாடாக சீனா உள்ளது. இந்தக் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 3.2% வளர்ச்சி அடைந்துள்ளது.
 
முடக்க நிலைக்கு பின்பு அங்கு மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. சீனாவின் ஜிடிபி எதிர்மறை வளர்ச்சியை தற்போது எதிர்கொள்ளவில்லை. வேறு சொற்களில் சொல்வதானால், இந்தியா மற்றும் மேற்கண்ட நாடுகளைப் போல சீனாவின் பொருளாதாரம் தேயவில்லை; வளர்ந்தே வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments