Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போர்நிறுத்தம் முடிந்தது, தாக்குதல் ஆரம்பமாகிறது

போர்நிறுத்தம் முடிந்தது, தாக்குதல் ஆரம்பமாகிறது
, சனி, 2 ஆகஸ்ட் 2014 (06:55 IST)
காசாவில் போர்நிறுத்தத்தை முடித்துக்கொண்டு தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிப்பதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என அது எச்சரித்துள்ளது.
 
இன்று முன்னதாக 72 மணி நேர போர்நிறுத்தம் காசாவில் அமலுக்கு வந்திருந்தது. மோதலில் ஈடுபடும் இஸ்ரேலிய இராணுவமும் ஹமாஸும் தமது படைகள் தாக்குதலில் ஈடுபடுவதை நிறுத்திவைத்திருந்தனர்.
 
ஆனாலும் காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லையில் உள்ள சுரங்கங்களை அழிக்கும் நடவடிக்கை நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடக்கவே செய்ய்ம் என இஸ்ரேல் கூறியிருந்தது.
 
ஆனால் ஹமாஸ்தான் இந்த போர்நிறுத்தத்தை முதலில் மீறியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டுகிறது.
 
ஆனால் இந்த போர்நிறுத்தம் மிகவும் பலவீனமானது என்பது ஏற்கனவே நிரூபனமாகியிருந்தது, ஏனென்றால் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய ஒரு தாக்குதலில் பாலஸ்தீனர்கள் நால்வர் கொல்லப்பட்டிருந்தும் பலர் காயமடைந்தும் இருந்தனர்.
 
போர்நிறுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பாக இஸ்ரேல் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 14 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
நேற்று பாலஸ்தீன ஆயுததாரிகள் வீசிய மோர்டார் குண்டில் சிக்கி இஸ்ரேலிய சிப்பாய்கள் 5 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
 
சென்ற மாதம் 8ஆம் தேதி ஆரம்பித்திருந்த இந்த மோதல்களில் சிவிலியன்கள் பெரும்பான்மையாக இதுவரை 1400க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
 
இஸ்ரேலிய தரப்பில் 63 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil