Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரான்ஸ்: புலி அல்ல பூனையாம்

Webdunia
சனி, 15 நவம்பர் 2014 (15:00 IST)
பிரான்ஸ் நாட்டில் பாரிஸுக்கு அருகே காணப்பட்ட மிருகம் நிச்சயமாக ஒரு புலி அல்ல என்று அந்தப் பிராந்திய நிர்வாகம் தற்போது கூறியுள்ளது.


 
அதேவேளை பிரான்ஸ் நாட்டு வன இலாக நிபுணர் ஒருவர், அது பெரிய அளவிலான வீட்டில் வளர்க்கும் பூனையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
 
அதனது கால்தடங்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் காணப்பட்டதுடன், அது ''மோட்டார் வே'' எனப்படும் பாரிய நெடு வீதியைக் கடந்து போனதையும் சிலர் பார்த்திருக்கிறார்கள்.
 
அதேவேளை தற்போது பூனையாக சொல்லப்படுகின்ற அந்த மிருகத்தை அதிகாரிகள் தேடிவரும் நிலையில், அது குறித்த மர்மம் பிரான்ஸ் தேசத்தையே பிடித்துக்கொண்டிருக்கிறது.
 
அது காணப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் எல்லாரும் பயத்தில் ''உசார்'' நிலையில் இருக்கிறார்கள். முன்னதாக அதனை புலி என்று கூறி தேடும்பணிகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் அந்த மிருகத்தை ( புலியா, பூனையா?) இன்னமும் பிடிக்க முடியவில்லை.

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

Show comments