Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதன்முறையாக தேர்தல் பிரச்சாரத்தில் சவுதி பெண்கள்

முதன்முறையாக தேர்தல் பிரச்சாரத்தில் சவுதி பெண்கள்
, ஞாயிறு, 29 நவம்பர் 2015 (20:40 IST)
சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை அந்நாட்டு பெண்கள் முதன் முறையாக ஆரம்பிதுள்ளனர்.
 

உள்ளூராட்சித் தேர்தலில் சவுதி பெண்கள் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர்
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், சுமார் 900 பெண்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுக்கும் தேர்தல் ஒன்றில் சவுதியில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
 
webdunia

சவுதியில் பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இருப்பதற்கு கடுமையான தடைகள் உள்ளன.
பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இணைந்து இருப்பதை சவுதி சட்டங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் அங்கு ஒரே நேரத்தில் தேர்தல் மேடையை பகிர்ந்துக்கொள்ள முடியாது.
 
பெண்கள் பொது இடங்களில் தமது முகத்தை காட்ட முடியாது என்பதும், ஆண் வேட்பாளர்கள் தமது படங்களை தேர்தல் பிரச்சார விளம்பரங்களில் போட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil