Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயில் எழுதாவிட்டாலும் தந்தையின் சொத்துக்களை பெற மகளுக்கு முழு உரிமை உண்டு!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (15:02 IST)
உயில் எழுதாவிட்டாலும் தந்தையின் சொத்துக்களை பெற மகளுக்கு முழு உரிமை உண்டு என்று மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக செய்தி.

 
தந்தையின் சுய சம்பாத்தியம் மற்றும் பரம்பரை சொத்துக்களில் பங்கு கோர, தந்தை உயில் எழுதாத நிலையில், மகள்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் அப்துல் நசீர் , கிருஷ்ண முராரி அமர்வு விசாரித்தது.
 
இந்த வழக்கு விசாரணையில், நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், இந்து வாரிசு உரிமை சட்டப்படி தந்தை உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது குடும்ப பாகப் பிரிவினை மூலமாக கிடைத்த பரம்பரை சொத்தில் பங்கு பெற வாரிசு என்ற அடிப்படையில் மகள்களுக்கும், விதவை மனைவிக்கும் முழு உரிமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
 
காலமான தந்தையின் சகோதரர்களுடைய வாரிசுதாரர்கள் உள்ளிட்ட மற்ற குடும்ப இணை உறுப்பினர்களை விட, தந்தையின் நேரடி வாரிசான மகள்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

பதவியேற்ற பின் வாழ்க உதயநிதி என கோஷமிட்ட திமுக எம்.பிக்கள்!

நாட்டையே உலுக்கிய புனே கார் விபத்து: 17 வயது சிறுவனுக்கு ஜாமின்..!

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பணத்தை வைத்து திமுக வாயை அடைத்துள்ளது: பிரேமலதா

அடுத்த கட்டுரையில்
Show comments