Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எபோலா தொற்று: உலக அவசர நிலை பிரகடனம்

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2014 (19:24 IST)
மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைரஸ் தொற்று காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் 'உலகளாவிய அவசர நிலையை' பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் தொற்று தொடர்பில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகின்றது.
 
இதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
 
எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகள் வைத்திருந்தவர்கள் மீது பயணக் கட்டுப்பாட்டுகள் விதிப்பதும் இந்த அறிவிப்புகளில் ஒன்று.
 
பாதிக்கப்பட்ட இடங்களில் இன்னும் பெரிய அளவில் மருத்துவ சிகிச்சை முறைகளை விரிவுபடுத்துவதும் இந்த நடவடிக்கைகளில் அடக்கம்.
 
நான்கு நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எபோலா தொற்று மிக மோசமாக பரவியுள்ளது.
 
கினி, லைபீரியா மற்றும் சியேரா லியோன் ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இந்த நோயினால் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
 
நைஜீரியாவிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments