Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் உயரும் பலி - என்ன ஆகும் அமெரிக்கா?

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (09:33 IST)
அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைப்பேசி வழியாக உரையாடிய மோதி, கோவிட் 19 வைரஸை எதிர்த்து அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா முழு பலத்துடன் போராடும் என்று தெரிவித்தார். கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 311, 544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

நியூயார்க்கில் மட்டும் ஒரே நாளில் 630 பேர் பலியாகி உள்ளதை அடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,565 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது என நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு கோமோ தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஸ்பெயின் நாடு. அந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சான்செஸ்டம் பேசிய மோதி, கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக இரங்கல் தெரிவித்தார். சர்வதேச அளவில் இத்தாலிக்கு அடுத்து ஸ்பெயினில்தான் அதிகளவிலான கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது.

இந்த சூழலில் தங்கள் நாட்டில் இரண்டாவது நாளாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்கிறார் ஸ்பெயின் பிரதமர். அங்குமட்டும் 11,947 பேர் பலியாகி உள்ளனர்.
பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவுடன் கொரோனா தொடர்பாக உரையாடியது பயனுள்ளதாக இருந்தது என மோதி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? ஈபிஎஸ் கேள்வி

எல்லைதாண்டி மீன் பிடித்தால் தமிழக மீனவர்களை கைது செய்வோம்! - இலங்கை அமைச்சர் எச்சரிக்கை!

சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!

நடிகர் பிரகாஷ்ராஜ் வருகையால் பார்லிமென்ட் நிலைக்குழு ஆலோசனை கூட்டம் ரத்து: என்ன நடந்தது?

நேற்றைய சரிவுக்கு இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments