Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் சுகாதார அமைப்பின் பலவீனத்தை கொரோனா வெளிப்படுத்தியது - சீனா ஒப்புதல்

Webdunia
திங்கள், 11 மே 2020 (14:58 IST)
தங்கள் சுகாதார அமைப்பில் இருந்த பலவீனங்களை கொரோனா வைரஸ் அடையாளம் காட்டி உள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார மையத்தின் இயக்குநர் லீ பின் சீன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
 
சீனா இப்படி தனது பிழைகளை ஒப்புக் கொள்வது மிகவும் அரிதானது. நோய்த்தடுப்பு, பொது சுகாதாரம், தரவுகளை திரட்டுதல் ஆகிய விஷயங்கள் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
 
கொரோனா உலகளாவிய தொற்றை சமாளிப்பதற்கு வடகொரியாவுக்கு சீனா உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா தொற்று சீனாவின் ஆட்சி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
 
சீனாவின் சுகாதார அமைப்பிலும் பெருந்தொற்றுகளை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளிலும் இருக்கிற பலவீனமான கன்னிகளை கண்டறிய இந்த கொரோனா தொற்று உதவியதாக அவர் தெரிவித்தார்.
 
வுஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியபோது அதன் ஆரம்பகட்ட அறிகுறிகளுக்கு மிக மெதுவாக எதிர்வினை ஆற்றியதாகவும், சர்வதேச சமூகத்தை விரைவாக எச்சரிக்கத் தவறிவிட்டதாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments