Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதமாற்றத் தடைசட்டத்துக்கு கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு

மதமாற்றத் தடைசட்டத்துக்கு கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு
, திங்கள், 22 டிசம்பர் 2014 (09:29 IST)
இந்தியாவில் மதமாற்றத்துக்கு தடை கொண்டுவர வேண்டும் என்ற விதமாய் மத்திய அரசு பேசிவருவதை எதிர்த்து இந்தியாவின் முன்னணி கிறிஸ்தவ அமைப்புகளின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கத்தோலிக்க ஆயர்கள் அமைப்பு, தேவாலயங்களின் தேசிய மன்றம், இவாஞ்ஜெலிக்கல் உறுப்புரிமைக் கழகம் ஆகியவற்றின் கூட்டமைப்பான தேசிய ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
 
மதமாற்றத்தை தடை செய்வது, இந்தியாவின் அரசியல்சாசனத்தில் உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதலாக அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர இப்படியான சட்டங்கள் கிறிஸ்தவர்கள் போன்ற மத சிறுபான்மையினரை இலக்குவைத்து துன்புறுத்தவே பயன்படும் என்றும் இதில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25ஆம் தேதியை நல்ல ஆளுமைக்கான தினமாக கொண்டாடப்போவதால் அன்றைய தினம் பள்ளிக்கூடம் திறக்கப்பட வேண்டும் என நவோதயா போன்ற பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறி அந்த நடவடிக்கையும் கிறிஸ்தவ அமைப்புகள் கண்டித்துள்ளன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil