Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன – தைவான் உறவில் 40 வருடங்களில் இல்லாத அளவு சிக்கல்

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (00:08 IST)
சீனா மற்றும் தைவான் இடையே 40 வருடங்களில் இல்லாத அளவு பதற்றம் நிலவுவதாக தைவானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இருநாடுகளுக்கும் இடையே ’தற்செயலமான தாக்குதல்’ நடைபெறும் ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். நான்கு நாட்களாக தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனா தொடர்ந்து ராணுவ ஜெட்களை ஏவி வருவதை அடுத்து தைவான் அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
 
தைவான் தன்னை ஒரு இறையாண்மை சுயாட்சை நாடாகதான் கருதுகிறது. ஆனால் சீனா தைவானை தனது நாட்டிற்கு உட்பட்ட ஒரு பகுதியாகவே பார்க்கிறது.
 
வலுக்கட்டாயமாக தைவானை தனது நாட்டுடன் ஒன்றுசேர்க்கும் வாய்ப்பு இருப்பதை சீனா நிராகரிக்கவில்லை. தைவானின் வான் பாதுகாப்பு மண்டலம், தைவான் ஜலசந்தி மற்றும் சீன பெருநிலப்பரப்பின் ஒரு பெரும் பகுதியை அடக்கியுள்ளது. சீனா மற்றும் தைவானுக்கு இடையே உள்ள அதிகாரபூர்வமற்ற எல்லையை கடப்பதை தைவான் ஊடுறுவலாகதான் பார்க்கிறது.
 
விளம்பரம்
 
தைவானை சீனா 2025ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக கைப்பற்றி இருக்ககும் என்றும் தைவானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சுகோ செங் தெரிவித்துள்ளார். அவர் தைபேயில் நாடாளுமன்ற கமிட்டியின் சார்பாக பேசினார். அமைச்சர் செங் ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பலை உருவாக்கும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான வரைவு ஒன்றையும் பரிசீலுக்குமாறு தெரிவித்துள்ளார்.
 
தைவான் "வான் பாதுகாப்பு மண்டலத்தில் 38 சீன படை விமானங்கள் நுழைந்ததாக" புகார்
கடும் மின் தட்டுப்பாடால் தத்தளிக்கும் சீனா - காரணம் என்ன?
 
சீனாவிடம் தைவானை ஆக்கிரமிக்கும் திறன் ஏற்கனவே உள்ளது என்று ஒப்புக் கொண்டுள்ள அவர் வரும் வாரங்களில் அது மேலும் எளிதானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஆனால் அது எவ்வாறு என்று அவர் விளக்கவில்லை.
 
1949ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தைவான் சீனாவிடமிருந்து பிரிந்தது. தைவான், ஒரு சுயாதீன நாடு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முயற்சிகளை நோக்கி அந்நாடு நகர்வது சீனாவுக்கு ஒரு பெரும் கவலையாகவே உள்ளது என்றும் அதன் அதிபர் சார் இங்வென் அது நோக்கிய எந்த நடவடிக்கை எடுப்பதையும் சீனா தடுக்கிறது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சீன கொடி
பட மூலாதாரம்,GETTY IMAGES
சீனாவின் சமீபத்திய இந்த செயல் குறித்து தைவானுடன் நெருக்கமாக இருக்கும் பல மேற்கத்திய நாடுகளும் கவலை தெரிவித்துள்ளது.
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீன அதிபர் ஷி ஜின்பின், ‘தைவான் ஒப்பந்தத்தை’ கடைப்பிடிப்பார் என்று தெரிவித்திருந்தார். அதிகாரப்பூர்வமாக சீனா என்பது ’ஒரே நாடு’ என்ற கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இருப்பினும் இந்த ஒப்பந்தம் அமெரிக்கா தைவானுடன் ஒரு அதிகாரப்பூர்வமற்ற உறவை மேற்கொள்ள அனுமதிக்கிறது. அமெரிக்க - தைவான் உறவுகள் குறித்த சட்டம் தைவானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உதவ வேண்டும் என்று கூறுகிறது எனவே அமெரிக்கா தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது.
 
சமீபத்திய நாட்களில் இருநாட்டு உறவுகள் மோசமாக இருந்தாலும், 1996ஆம் ஆண்டு இருந்த அளவுக்கு மோசமாகவில்லை. அப்போது சீனா தைவானின் அதிபர் தேர்தலை ஏவுகணை சோதனைகளை கொண்டு தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments