Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் அணு ஆயுதக் குவிப்பு கவலையளிக்கிறது: அமெரிக்கா

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (10:27 IST)
சீனா அணு ஆயுதங்களைக் குவித்து வருவது கவலை தருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

"சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை சில செய்திகளும் வேறு சில நடவடிக்கைகளும் காட்டுகின்றன" என்று அவர் கூறினார்.
 
சீனா 100-க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைக் கிடங்குகளை வைத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் இதழில் அண்மையில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்தே அமெரிக்காவின் எதிர்வினை வந்திருக்கிறது.
 
"இதுபோன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது" என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
 
சீனாவின் மேற்கு பாலைவனப் பகுதியில் ஏவுகணைக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக செய்திகள்  வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments