Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட்: போட்டியிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (11:35 IST)
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. அவர்களது அணி சென்னை வந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா ஆச்சர்யம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு காஷ்மீரில் இருந்து புகழ்பெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டியின் தீபத்தை ஏந்தி வந்து, இந்தியா அதை அரசியலாக்கியுள்ளது. சர்வதேச செஸ் சம்மேளனத்திடம் இந்தப் பிரச்னையை எடுத்துக் கூறுவேன்,” என்று கூறியுள்ளார்.

வியாழனன்று, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இந்தியா வந்திருந்தாலும், அதில் பங்கேற்க வேண்டாம் என திடீரென முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது," என்று கூறினார்.

மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்றும் இதில் பாகிஸ்தான் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

தமிழக சட்டசபை கூடும் தேதி: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

ராமதாசுக்கு வேறு வேலை இல்லை, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments