Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புகையிலைக்கும் புற்று நோய்க்கும் தொடர்பு காட்டும் ஆய்வு இல்லை என்பது தவறு - டாக்டர் சாந்தா

புகையிலைக்கும் புற்று நோய்க்கும் தொடர்பு காட்டும் ஆய்வு இல்லை என்பது தவறு - டாக்டர் சாந்தா
, புதன், 1 ஏப்ரல் 2015 (12:05 IST)
புகையிலை பயன்பாட்டுக்கும் புற்றுநோய்க்கும் இடையில் நேரடியான தொடர்பை நிரூபிக்கும் ஆய்வுகள் ஏதும் இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் குமார் காந்தி கூறியது தவறு என்று சென்னை புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா கூறுகிறார்.
 

 
இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக டாக்டர் சாந்தா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
உலகின் பல பகுதிகளில் சிகரெட் பெட்டிகளில் – புகையிலையால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை காட்டும் புகைப்படங்களை ஒட்ட வேண்டும் என்ற விதி படிப்படியாக கொண்டுவரப்படுகிறது. இந்தியாவிலும் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிமுதல் அதாவது நாளை முதல் சிகரெட் பெட்டிகளில் இருக்கும் 85 சதவீத இடத்தை உடல் பாதிப்பு குறித்த எச்சரிக்கைகளால் நிரப்ப வேண்டும் என்று சிகரெட் நிறுவனங்களுக்கு முன்பு கூறப்பட்டிருந்தது.
 
சிகரெட் மட்டுமல்லாது மூக்குப் பொடி, பான் போன்றவைகள் மூலமாகவும் புகையிலை உட்கொள்ளப்படுகிறது.
 
எச்சரிக்கை!
 
சிகரெட் பெட்டிகளில், எச்சரிக்கை செய்திகளை வெளியிட சிகரெட் நிறுவனங்களுக்கு அதிக கால அவகாசம் தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள, இது தொடர்பான நிலைக் குழுவின் தலைவரான திலிப் குமார் காந்தி, புகையிலையால் புற்றுநோய் வருகிறது என்று இந்திய ஆய்வு எதுவும் காட்டவில்லை என்று கூறியுள்ளார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.
 
ஆனால், ஆண்களுக்கு வரும் 40 சதவீத புற்றுநோய்க்கு புகையிலைப் பயன்பாடு காரணம் என்று ஆய்வுகள் காட்டுவதாக டாக்டர் சாந்தா தெரிவித்தார். அதிலும் குறிப்பாக வாய் புற்றுநோய், மூச்சுக் குழல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றுக்கும் புகையிலைப் பயன்பாடுக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
சிகரெட் மட்டுமல்லாது மூக்குப் பொடி, பான் போன்றவைகள் மூலமாகவும் புகையிலை உட்கொள்ளப்படுகிறது.
webdunia
எச்சரிக்கை செய்திகளை சிகரெட் பெட்டிகளில் கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் டாக்டர் சாந்தா தெரிவித்தார்.
 
புகையிலைப் பழக்கம் இல்லாதோருக்கு மரபியல்ரீதியான காரணங்களாலும் புற்றுநோய் வந்தாலும், புகையிலையை பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பே அதிகம் என்றும் டாக்டர் சாந்தா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil