Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது

கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது
, புதன், 22 ஏப்ரல் 2015 (13:22 IST)
சென்னையில் 20.04.15 இரவு, இரண்டு இடங்களில் கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்டு, தாக்கப்பட்டது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

 
சென்னை மைலாப்பூர் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் விஸ்வநாத குருக்கள் என்பவர் நேற்று இரவு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது, மோட்டர் சைக்கிள்களில் வந்த சிலர், திடீரென அவரைத் தாக்கி, அவரது பூணூலை அறுத்ததாகக் கூறப்படுகிறது.
 
76 வயதாகும் விஸ்வநாதன் காரணீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார்.
 
மயிலாப்பூர் காவல் நிலையத்தில் காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர்.
 
இந்த சம்பவம் நடந்து சிறிது நேரம் கழித்து, மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சந்தான கோபாலன் என்ற 69 வயது முதியவர் ஒருவரும் தாக்கப்பட்டார்.
 
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். பிறகு இருவர் கைது செய்யப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்டவர்கள் மீது கும்பலாகக் கூடுதல், அவதூறாக பேசித் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்தத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள், சிவாச்சாரியார் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மைலாப்பூரில் பிற்பகலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகளைத் தடைசெய்ய வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.
 
இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண், ஊடகங்களிடம் பேசிய போது, பாஜகவின் எச்.ராஜா போன்றவர்கள் பெரியார் குறித்து அவதூறாகப் பேசுவதுதான் இது போன்ற சம்பவங்களைத் தூண்டிவிடுகிறது என்று குறிப்பிட்டார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil