Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் காந்தி சிலை அமைக்கத் திட்டம்

Webdunia
புதன், 9 ஜூலை 2014 (18:47 IST)
பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்திக்கு சிலை வைக்கப்போவதாக இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை ஒன்றை அமைக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த காந்தி நினைவிடம் அடுத்த ஆண்டு திறந்துவைக்கப்படும் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக்கும் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்னும் டெல்லியில் இன்று அறிவித்தனர்.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரும் நிதியமைச்சரும் வர்த்தக தூதுக் குழுவொன்றுக்கு தலைமை தாங்கி இந்தியா வந்துள்ளனர். இந்தியாவுடனான வணிக உறவுகளை மேலும் பலப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கம்.

'உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தந்தையான மகாத்மா காந்தியின் உருவச் சிலை நாடாளுமன்றங்களின் தாய் என்று வர்ணிக்கப்படும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் வாயிலில் அமைவது பொருத்தமானது' என்று ஆஸ்போர்ன் கூறினார்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட முன்னாள் பிரிட்டிஷ் மற்றும் வெளிநாட்டு அரச தலைவர்களின் உருவச் சிலைகள் அமைந்துள்ளன.

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவுடன் பிரிட்டன் உறவுகளை வலுப்படுத்தி வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள விரும்புவதாக பிபிசியின் பொருளாதாரத் துறை செய்தியாசிரியர் கூறுகின்றார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments