Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'மார்பகப் புற்றுநோய் பரவுவதற்காக எலும்பில் ஓட்டையிடுகிறது': விஞ்ஞானிகள்

'மார்பகப் புற்றுநோய் பரவுவதற்காக எலும்பில் ஓட்டையிடுகிறது': விஞ்ஞானிகள்
, வியாழன், 28 மே 2015 (21:23 IST)
சில வகையான மார்பகப் புற்றுநோய்களின் போது சுரக்கப்படும் இரசாயனப் பொருட்கள் எலும்புகளில் ஓட்டையை ஏற்படுத்துவதகாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 

 
இதன்மூலம் இரண்டாவது ரக புற்றுநோய்கள் ஏற்படுமளவுக்கு எலும்புகள் பலவீனமடைந்துவிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
புற்றுநோய் எலும்புக்கு பரவிவிட்டால் அதனை குணப்படுத்துவது சிரமம்.
 
குறித்த இரசாயனப் பொருட்கள் சுரந்து எலும்பில் ஓட்டை ஏற்படுத்தும் நடைமுறையை தடுப்பதற்கான வழிகள் கண்டறியப்பட்டால், புதிய வகையான சிகிச்சை முறைகளுக்கு அது வழிவகுக்கும் என்று புற்றுநோய் தொடர்பான தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil