Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாரடைப்பை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றிலேயே கண்டறிய முடியும்

மாரடைப்பை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றிலேயே கண்டறிய முடியும்
, சனி, 10 அக்டோபர் 2015 (20:53 IST)
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றின் மூலம் இலகுவில் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


 

 
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெரும்பாலானவர்களுக்கு இந்த ரத்தப் பரிசோதனையை செய்வதன் மூலம் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய முடியும் என்று ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
மாரடைப்பு ஏற்படும்போது உடலில் ஒரு குறிப்பிட்ட புரதத்தின் (troponin) அளவு அதிகரிப்பதை ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் ரத்தப் பரிசோதனை ஒன்றின் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் புதிய பரிசோதனை மிகவும் துல்லியமானது என்றும் மாரடைப்பு ஆபத்து மிகக் குறைவாக இருப்பவர்களை விரைவாக அடையாளம் கண்டு மருத்துவமனையிலிருந்து அனுப்பமுடியும் என்றும் கூறப்படுகின்றது.
 
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் அவசியமற்ற மருத்துமனை அனுமதிகளையும் மருத்துவசேவை வழங்குனர்களின் செலவினத்தையும் கணிசமான அளவு குறைக்க முடியும் என்றும் அறிவியல் சஞ்சிகை ஒன்றில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil