Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆட்ட நகரங்கள் அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆட்ட நகரங்கள் அறிவிப்பு
, செவ்வாய், 21 ஜூலை 2015 (20:30 IST)
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 

 
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான ஆட்டங்கள் இந்தியாவின் எட்டு நகரங்களில் இடம்பெறும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
 
இறுதி ஆட்டம் கொல்கத்தா நகரின் ஈடன் கார்டன் அரங்கில் விளையாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கொல்கத்தாவைத் தவிர சென்னை, பெங்களூரு, தர்மசாலா, மொஹாலி, மும்பை, நாக்பூர் மற்றும் புதுடில்லியிலுள்ள விளயாட்டு அரங்குகளில் ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன.
 
எனினும், அந்த எட்டு ஊர்களிலுள்ள விளையாட்டு அரங்குகள் சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை நிர்ணயித்துள்ள தரம் மற்றும் வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
 
டி20 உலகப் போட்டிக்கான ஆட்டங்கள் எங்கெங்கு நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து, அந்தப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் துவங்கப்பட்டுள்ளன என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
 
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அந்த உலகக் கோப்பைக்கான போட்டியில், ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டிகள் ஒரே சமயத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil