Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்தின் முதல் அதிபரை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் தூக்கிலிடப்பட்டார்

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (14:01 IST)
1975ஆம் ஆண்டில் வங்கதேச தலைவரை கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் ராணுவ வீரரான அப்துல் மஜேத் தூக்கிலிடப்பட்டார்.
 
வங்க தேசத்தின் தந்தை என்று அழைகப்பட்ட அந்நாட்டின் முதல் அதிபரான க்ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த குற்றவாளியான அப்துல் மஜேத், 25 ஆண்டுகளாக போலீஸாரிடம் சிக்காமல் இருந்து, சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
 
இந்த வார தொடக்கத்தில் அப்துல் மஜேத்தின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததையடுத்து, வங்கதேச தலைநகர் தாகாவில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
தற்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் தந்தையான க்ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1975ஆம் ஆண்டு ராணுவ சதியால் கொல்லப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் அப்போது கொல்லப்பட்டனர்.
 
வங்கதேசம், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்ற நான்கு ஆண்டுகளில் இந்த சம்பவம் நடந்தது. இந்த சதி செயலுக்கு பிறகும் அப்துல் மஜேத், வங்கதேசத்தில்தான் இருந்து வந்தார். ஆனால், 1996ஆம் ஆண்டில் பிரதமராக ஹசினா தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments