Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க புகையிலை நிறுவனத்துக்கு வரலாறு காணாத அபராதம்

அமெரிக்க புகையிலை நிறுவனத்துக்கு வரலாறு காணாத அபராதம்
, திங்கள், 21 ஜூலை 2014 (11:40 IST)
நுரையீரல் புற்று நோயினால், 18 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவரின் மனைவிக்கு, 23.6 பில்லியன் டாலர்களை வழங்கும்படி அமெரிக்காவின் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களில், இரண்டாவது பெரிய நிறுவனமான ஆர் ஜெ ரெனால்ட்ஸுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

சிகரெட் புகைக்கும் பழக்கத்துக்கு, பல வருடங்களாக அடிமைப்பட்டிருந்த, தனது கணவர் ராபின்சன், நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்தமைக்கு அந்த நிறுவனமே காரணம் என்று மனைவி சிந்தியா வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
புகைப் பிடித்தலினால் ஏற்படக் கூடிய ஆபத்தான் விளைவுகள் குறித்து, சிந்தியாவின் கணவர் ராபின்சன் போன்ற பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க ரெனால்ட்ஸ் நிறுவனம் தவறியதால், அலட்சியம் செய்ததால் அந்த நிறுவனம் நட்ட ஈடு வழங்கவேண்டும் என்று சிந்தியாவின் வழக்கறிஞர்கள் நான்கு வாரம் வாதாடி வெற்றி கண்டனர்.
 
அபராதத் தொகை மிக மிக அதிகம் என்றும், மாநிலச் சட்டங்களையும், அமெரிக்க அரசியல் சாசனத்தையும் மீறுகிறது என்று, ரெனாட்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் வாதாடினர்.
 
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தாங்கள் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஃப்ளோரிடா மாநிலத்தில், எந்தவொரு தனியார் வழக்கிலும், இவ்வளவு பெரிய தொகை, நட்ட ஈடாக முன்னர் வழங்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil