Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல் அக்சா பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

அல் அக்சா பள்ளிவாசல் மீண்டும் திறப்பு
, சனி, 1 நவம்பர் 2014 (16:11 IST)
மத்தியகிழக்கின் ஜெருசலேத்திலுள்ள அல்-அக்சா பள்ளிவாசல் வளாகத்தை, கொந்தளிப்பு நிலவியதை அடுத்து, வியாழனன்று மூடியிருந்த இஸ்ரேலிய அதிகாரிகள், அதனை மீண்டும் திறந்துள்ளனர்.


 




வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு முன்பாக கூடுதலான போலீஸ் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.
 
பாலஸ்தீனர் ஒருவரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றதற்கு தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கான தினம் என வெள்ளிக் கிழமையை அறிவித்துள்ள ஜெருசலேம் வாழ் பாலஸ்தீனர்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
 
வலதுசாரி யூத ஆர்வலர் ஒருவர் மீது புதன்கிழமை நடந்த துப்பாக்கித் தாக்குதலை அந்த பாலஸ்தீனர்தான் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

ஜெருசலேத்தில் அதிகமான பதற்றம் நிலவுவது இது தொடர்பாக அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கவலை வெளியிட்டுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil