Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளைத் தோலுடன் பிறந்த ஆப்ரிக்கப் பெண் மாயமானது குறித்து விசாரணை

Webdunia
புதன், 31 டிசம்பர் 2014 (23:27 IST)
இயற்கைக்கு மாறாக வெள்ளைத் தோலுடன்(அல்பைனோ) பிறந்த பெண் ஒருவர் காணமல் போனது குறித்து நான்கு பேரை தான்சானியா காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

நாட்டின் வட பகுதியில் உள்ள மவாசா என்ற இடத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை நான்கு வயது சிறுமி ஒருவர் காணமல் போனதையடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.
 
அந்தச் சிறுமி கடத்தப்பட்டது தொடர்பில் அவருடைய தந்தை உட்பட பலரிடம் விசாரணைகள் நடைபெறுகின்றன. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்பதைக் கண்டறிய காவல்துறை முயன்று வருகிறது.
 
கடந்த 2000ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து இதுவரை அவ்வகையில் வெள்ளை தோலுடன் பிறந்தவர்கள் 74 பேர் தான்சானியாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஆய்வு கண்டறிந்துள்ளது.
 
இப்படிக் கொல்லப்படுவோரின் உடல் உறுப்புக்கள் - அதிர்ஷ்டப் பொருட்களாக - 600 டாலர்கள் வரை விலைக்கு விற்கப்படுகின்றன.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

Show comments