அதீத உடலுறவு காரணமாக இறந்ததா அரியவகை உயிரினம்?

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (15:31 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்கு க்வோல் எனப்படும் விலங்கு தூக்கத்தை தொலைத்து அதீத உடலுறவில் ஈடுபடுவதாகவும் இதுவே அவற்றின் இறப்புக்கு காரணமாகிவிடுவதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
ஆண் க்வோல்கள் உடலுறவுக்காக பெண் க்வோலைத் தேடி தூக்கத்தையும் மறந்து நீண்ட தூரம் பயணிக்கின்றன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 
பெண் க்வோல்கள் நான்கு ஆண்டுகள் வரை வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் முடியும்.
 
“ அவை கூடுமானவரையில் இணையை சேர்வதற்கு அதிக தூரத்தை கடக்கின்றன, மேலும் அவற்றின் உந்துதல் மிகவும் வலுவாக இருப்பதால், இணையைத் தேடுவதற்காக அதிக நேரம் தூங்குவதைத் தவிர்த்து விடுகின்றன”என்று சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கிறிஸ்டோபர் கிளெமெண்டே கூறினார். இவரது பல்கலைக்கழகம் குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வின் முடிவுகள் புதன்கிழமையன்று வெளியிடப்பட்டன.
 
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேச கடற்கரையில் உள்ள க்ரூட் ஐலாண்ட் தீவில் உள்ள வடக்கு க்வோல்கள் உடலில் டிராக்கர்கள் பொருத்தி 42 நாட்கள் ஆராய்ந்து இந்த தரவுகளை சேகரித்துள்ளனர்.
 
அவர்கள் ஆய்வு செய்த க்வோல்களில் சில ஓர் இரவில் 10 கிலோமீட்டர் தூரத்துக்கும் மேல் பயணித்துள்ளன. சராசரி நடை நீளத்தின் அடிப்படையில் இது மனிதர்கள் கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் நடப்பதற்கு சமம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
 
மேலும், ஆண் உயிரிழனங்கள் அதிக அளவு ஒட்டுண்ணிகளை ஈர்க்கின்றன. இதற்கு மிக சரியான காரணம்: அவை தங்களை பராமரித்துக்கொள்ள குறைவான நேரத்தையே ஒதுக்குகின்றன,
 
உணவைத் தேடும் போதோ அல்லது வேட்டையாடிகளைத் தவிர்க்கும்போதோ ஆண் க்யோல்ஸ்கள் பெண் க்வோல்களை போல் விழிப்புடன் இருப்பதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
“தூக்கமின்மை மற்றும் நீண்ட காலத்திற்கு அதனுடன் தொடர்புடைய அறிகுறிகள் காரணமாக குணமடைவது சாத்தியமற்றதாக ஆகிறது. மேலும், இனப்பெருக்க காலத்திற்கு பிறகு ஏற்படும் ஆண் க்வோல்களின் இறப்பிற்கான காரணத்தை விளக்குவதாகவும் இது உள்ளது. ” என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஜோசுவா காஷ்க் கூறினார். மேலும் வாகனங்கள் மோதுவதைத் தவிர்க்க முடியாமலோ அல்லது சோர்வு காரணமாகவோ அவை அதிகம் இறக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினிவில் காணப்படும் மார்சுபியல் பாலூட்டிகளின் பரந்த குடும்பங்களை மற்றும் க்வோல்களை தூக்கமின்மை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய மேலதிக ஆய்வுகளின் அவசியத்தை ஆரம்பகட்டத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன என்றும் காஷ்க் கூறினார்.
“ஆண் க்வால்கள் தங்கள் உயிர்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக தூக்கத்தை துறப்பதால், உடல் செயல்பாட்டில் தூக்கமின்மையின் விளைவுகளுக்கு வடக்கு க்வால்கள் ஒரு சிறந்த மாதிரி இனமாக மாறும்” என்று அவர் கூறினார்.
 
ஆஸ்திரேலிய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, சுமார் 100,000 வடக்கு க்வோல்கள் மீதமுள்ளன, ஆனால் அவற்றின் எண்ணிக்கை விரைவாக சரிந்து வருகின்றன. வளர்ச்சியின் காரணமாக வாழ்விட இழப்பு ஏற்படுவதாலும், தெருவோர பூனைகளின் தாக்குதல்கள் ஒரு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாலும், கேன் தோட் எனப்படும் தேரையின் நஞ்சினாலும் அவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் மோதியதில் தீப்பற்றிய பேருந்து! 21 பேர் உடல் கருகி பலி! - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் திடீர் உயர்வு? பொதுமக்கள் புகாருக்கு அதிகாரிகள் விளக்கம்!

மோடிக்கிட்ட பேசுனேன்.. ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா நிறுத்துகிறது! - ட்ரம்ப் மகிழ்ச்சி!

உக்ரைனில் போய் சண்டை போட சொல்றாங்க.. காப்பாத்துங்க! - ரஷ்யாவில் இருந்து கதறிய இந்தியர்!

சென்னை உட்பட 8 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! - இன்றைய மழை வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்